வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: மேரி மதி , மேரா தேஷ் நிகழ்ச்சிக்காக ஆக.,13/23 ம் தேதி ஞாயிற்று கிழமையில் மாநிலம் முழுவதும் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது உ.பி., அரசு
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Tamil_News_large_340294920230813211738.jpg)
நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டை கொண்டாட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உ.பி., மாநில அரசு பள்ளி மாணவர்களிடையே ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் ஹர் கர் திரங்கா, மற்றும் மேரி மதி , மேரா தேஷ் என்ற நிகழ்ச்சியை கொண்டாட முடிவு செய்தது
இதற்காக பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையில் கொண்டாட முடிவு செய்தது. இதற்காக மாநில அரசு சார்பில் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அன்றைய தினம் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநரும், மதிய உணவு ஆணையத்தின் இயக்குநருமான விஜய் கிரண் ஆனந்த் பிறப்பித்து உள்ளார்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/gallerye_203046416_3402949.jpg)
மேலும் ஆக.,13/23 ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள மேரி மதி மேரா தேஷ் என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மாவட்டங்கள் வாரியாக சம்பந்தப்பட்ட இயக்குனரகத்தின் நோடல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
மாநில அரசின் உத்தரவுப்படி ஞாயிற்றுகிழமைகளில் பள்ளிகள் திறந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement