நீட் தற்கொலை.. "ஆளுநர் மீது பாய்வதை விட்டுவிட்டு வேறு வேலையை பாருங்க".. பொங்கிய வானதி சீனிவாசன்

கோவை:
நீட் தேர்வால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அதற்கு கோவை பாஜக எம்எல்ஏ

கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தந்தை நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நீட் தற்கொலைகள் நிகழ்ந்து வருவதற்கு மத்திய அரசே காரணம் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு நான் ஒருபோதும் கையெழுத்து போட மாட்டேன்; நீட் தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறினார். ஆளுநரின் பேச்சு அன்றே சர்ச்சையான நிலையில், தற்போது இந்த தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதால் ஆளுநர் ரவிக்கு

உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் சில கேள்விகளை வைக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டது தான் நீட் தேர்வு என்பது உங்களுக்கு தெரியும்தானே.. அப்படி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் ரத்து செய்வது சாத்தியமா?

இரண்டாவது கேள்வி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறியவர் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின். பொதுப் பட்டியலில் கல்வி இருக்கும் போது, நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள் என்று கேட்ட போது, அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னவர் இன்றைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இப்போது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பது ஏன்?

ஒருவேளை, முதல்வர் ஸ்டாலின் மத்தியில் அரசியல் மாற்றம் வரும் என்று நினைத்து காத்திருந்தால் அவர் கனவு காண்கிறார் என்று அர்த்தம். ஒருபோதும் மத்தியிலே அரசியல் மாற்றம் இனி நடக்காது. மீண்டும் மீண்டும் பாஜக தலைமையிலான அரசு தான் அமையப் போகிறது. எனவே பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் ஒரு பொய் வாக்குறுதியை கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.

மாணவ சமுதாயத்தை திமுக தவறாக வழிநடத்தி வருகிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்தால் நீங்கள் உயிரிழக்கலாம். அந்த உயிரிழப்புக்கு பின்னர் நீங்கள் புகழப்படுவீர்கள்.. உங்கள் பெற்றோருக்கு நிதியுதவி கிடைக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. எல்லாவற்றுக்கும் நீங்கள் காரணமாக இருந்துகொண்டு இப்போது ஆளுநரையும், மத்திய அரசையும் குறைகூறினால் எப்படி? நீங்கள் (அரசு) அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்து போட்டுதானே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். ஆகவே ஆளுநர் மீது பாய்வதை விட்டுவிட்டு வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என வானதி சீனிவாசன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.