வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 5.14 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் ஜூன் 12 ந் திறந்துவிடப்பட்டது விட்டது. அணையில் நீர் நிலவரம் தற்போது 55 அடியாக உள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 பிப்ரவரி மாதம் வரையில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படும்.
அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைவாக இருப்பதால் பாசனத்திற்கு கூடுதல் நீரை திறக்க இயலாமல் போய்விடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக மாநிலத்திற்கு உத்திரவிட்டுள்ளது.
இரு மாநில அரசுகளும் சுகமாக செயல்பட்டு விவசாயிகளுக்கு நல்லது செய்வார்கள்.
காவிரி பிரச்சனைப் பற்றி பேசாமல் அதை விட முக்கியமான ஒன்றைப் பற்றி இங்கே பார்ப்போம். அதுதான் நீர் மேலாண்மை. நீர் மேலாண்மை விவசாயத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு நாட்டிற்கு நீர் மேலாண்மை, நிதி மேலாண்மை ஆகிய இரண்டும் இரு கண்கள் போன்றது. இவை இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒரு நாடு ஒரு மாநிலம் வேகமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதை உணரலாம்.
குடிமராமத்து பணிகள் பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. விதை விதைத்தல், நடவு, மற்றும் அறுவடை ஆகியவை திருவிழா போல கொண்டாடப்படும். குடிமராமத்தும் அது போல ஒரு கொண்டாட்டம் தான்.
விவசாய பணிகள் முடிந்து ஓய்வாக இருக்கும் கோடைக்காலங்களில் இப்பணி தொடங்கும். ஆறு, ஏரி, வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் செடி கொடிகள் மற்றும் புதர்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதிகமாக படிந்துள்ள மண்ணை அகற்றுதல் மேடு பள்ளங்களை சரி செய்யும் வேலைகளும் நடைபெறும்.
நூறு நாள் வேலையிலும் வாய்க்கால்கள் சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மழை நீரை சேமிக்க குளங்கள் ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும். அதன் கரைகளை உயர்த்தி சேமிக்கும் நீரின் அளவை உயர்த்திட வேண்டும்.
நீர் மேலாண்மையின் இன்னொரு முக்கிய அம்சமாக இருப்பது மழை நீர் சேமிப்பு. 2001-2006 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு தொட்டி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தியது. அது தொடர்பான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே வரவில்லை. மழை நீர் சேமிப்பு தொடர்பான வாசகங்கள் சிலவற்றை இணையதளம் ஒன்றில் பார்த்தேன். அதில் சில…
மழை நீர்த் தொட்டி
நம் வாழ்வுக்கு வட்டி…
வான் தரும் மழை – அதை
வீணாக்குவது நம் பிழை…
நீர் மேலாண்மை பற்றியும் மழை நீர் சேமிப்பு பற்றியும் பாடங்களை ஆரம்பக் கல்வியிலே கொண்டு வரவேண்டும். மேல் நிலைப் பள்ளியிலே அது தனி பாடமாக கட்டாயபாடமாக அனைத்து பிரிவிலும் சேர்க்க வேண்டும்.
சேவை மனப்பான்மையோடு கல்லூரி நடத்தும் கல்வியாளர்கள் நீர் மேலாண்மை தொடர்பான நல்ல விஷயங்களை மாணவர்களிடமும் மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.
தாகம்…தாகம்…என்று பயிர்களும் மரம் செடி கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் கதறும் சூழ்நிலை இங்கில்லை என்று உலகிற்கு உணர்த்த வேண்டும்.
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”
நீர் மேலாண்மையின் தத்துவம் அவ்வையார் பாடிய இந்த பாடலில் மறை பொருளாக உள்ளது. அந்த பாடலின் பொருள் அறிந்து நீர் மேலாண்மையில் நாம் மேன்மையான நிலையில் உள்ளோம் என்பதை நிரூப்பிபோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.