Jailer, OMG 2, Gadar 2: `கொரோனாவுக்குப் பிறகு அரங்குகளில் அதிரும் விசில், அதிக வசூல்!' – MAI அறிக்கை

தமிழில் `ஜெயிலர்’, பிற மொழிகளில் `OMG-2′, `GADAR-2′ மற்றும் `Bhola Shankar’ என இந்த வீக்கெண்ட் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்லதொரு வீக்கெண்டாக அமைந்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு திரையரங்கிற்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் மிகவும் குறைந்துவிட்டது எனத் திரையரங்க உரிமையாளர்களின் மத்தியில் ஒருவித வருத்தம் உண்டாகியிருந்தது. உச்ச நட்சத்திரங்களின் படங்களை மட்டுமே திரையரங்கில் காணலாம், மற்றபடி பெரும்பாலான படங்களை ஓ.டி.டி-யிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்பதே சினிமா ரசிகர்களின் மனநிலையாகிவிட்டது.

இந்நிலையைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான `ஆர்.ஆர்.ஆர்’, `கே.ஜி.எஃப்-2′, `விக்ரம்’, `லவ் டுடே’, `பொன்னியின் செல்வன் 1, 2′ போன்ற படங்கள் தலைகீழாக மாற்றின. கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு ஏராளமான ரசிகர்களைத் திரையரங்குகள் நோக்கி வரச் செய்தன.

அந்த வகையில் இந்த சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறை நாள்கள் என இந்த வீக்கெண்ட் சினிமா ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளருக்கும் நல்லதொரு வீக்கெண்டாக அமைந்துள்ளது. அதற்கேற்றார் போலத் தமிழில் ‘ஜெயிலர்’ பிற மொழிகளில் ‘OMG 2’, ‘Gadar 2’ மற்றும் ‘Bhola Shankar’ படங்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் மட்டுமே 90% மேலான திரையரங்குகளில் வெளியாகி சோலோவாக வசூல் வேட்டையாடி வருகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Jailer

இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ‘மல்டிபிளக்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா’, கடந்த 10 வருடங்களில் இந்த வீக்டெண்டில் மட்டுமே அதிகமான பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளது.

இதுபற்றி அந்த அறிவிப்பில், “ஆகஸ்ட் 11-13ம் தேதி; இந்த வீக்கெண்டில் மட்டும் 2.20 கோடிக்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வந்துள்ளனர். கடந்த 10 வருடங்களில் இதுவே அதிகப்படியான எண்ணிக்கை. அதுமட்டுமின்றி 100 ஆண்டுக்கால சினிமா வரலாற்றில் இந்த வீக்கெண்ட்தான் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, ‘ஜெயிலர்’, ‘OMG 2’, ‘Gadar 2’ மற்றும் ‘Bhola Shankar’ படங்கள் நல்ல வசூலைப் பெற்று சாதனைப் படைத்து வருகின்றன. சினிமா ரசிகர்கள் மீண்டும் திரையரங்கை நோக்கிப் படையெடுப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.