Rajini about Vijay: விஜய்யிடம் ரஜினிக்கு பிடித்த விஷயங்கள்..தளபதியை பாராட்டி தள்ளிய தலைவர்..!

தற்போது சோஷியல் மீடியாக்களில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பஞ்சாயத்து பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள், தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் தளபதி தான் என சொல்ல, ரஜினி ரசிகர்களோ, என்றென்றும் தலைவர் தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என பேசி வருகின்றனர்.

இதன் காரணமாகவே இவர்களுக்குள் அடிக்கடி மோதல் வெடித்து வருகின்றன. கடந்த பல மாதங்களாக இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் போய்க்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சோஷியல் மீடியாவில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளது.

Dhanush: தனுஷ் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் ஹீரோ..அதுவும் தனுஷின் இயக்கத்தில்..பின்னணி இதுதானா ?

இதில் இடம்பெற்ற ஹுக்கும் என்ற பாடல் வரிகள் தளபதி ரசிகர்களை சீண்டியது. இதனால் மேலும் இவர்களுக்குள் மோதல் வெடித்தது. இந்நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொல்லிய குட்டி கதை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கழுகு மற்றும் காக்கவை வைத்து அவர் சொன்ன குட்டி கதை வைரலானது.

விஜய்யை பாராட்டிய ரஜினி

இதையடுத்து நெல்சன் அவ்விழாவில் பேசுகையில், ரஜினியிடம் கதை சொல்ல முதலில் தயங்கினேன். ஆனால் விஜய் தான் என்னை ஊக்குவித்து ரஜினியிடம் கதை சொல்ல அனுப்பிவைத்தார் என கூறினார். இதன் பிறகு ஒரு சில ரசிகர்கள், அவர்களே நட்பாக தான் இருக்கின்றனர். பிறகு நாம் ஏன் சண்டையிடவேண்டும் என அடங்கிவிட்டனர்.

இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இன்றளவும் மோதலில் தான் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது வெளியான ஒரு தகவல் அந்த மோதலை சிறிய அளவிலாவது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது நெல்சனின் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தை பற்றி ரஜினி நெல்சனிடம் பாஸிட்டிவாகவே பேசியுள்ளாராம். பீஸ்ட் படத்தில் விஜய்யின் நடிப்பும், அவரின் லுக்கும் ரஜினிக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் விஜய் செம பிட்டாக இருப்பதாகவும் கூறி அவரை மனதார பாராட்டினாராம் ரஜினி. மேலும் ரஜினி எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே தான் பேசுவார் என நெல்சன் கூறினார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான பிறகு நெல்சன் ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகின்றார். அந்த பேட்டியில் நெல்சன் பல விஷயங்களை பற்றி பேசி வரும் நிலையில் அந்த விஷயங்கள் எல்லாம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.