தன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரத்த தானம் செய்த தன் ரசிகர்களை நேற்று சந்தித்து, நன்றி கூறினார் சூர்யா. தற்போது `சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ரசிர்களுக்கு ஆலோசனைகள் கூறிய சூர்யா, அவர்களிடம் மனம் விட்டு சில விஷயங்களையும் பேசியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/210ea342-419f-409e-b4b2-c5fc5e064e56.jfif.jpeg)
கடந்த மாதம் அதாவது ஜூலை 23ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாள். அன்றைய தினம் அவர் லண்டனில் இருந்ததால், பிறந்த நாளையும் அங்கேயே கொண்டாடினார். இந்நிலையில் அவரது பிறந்த நாளில் ரத்த தானம் செய்த ரசிகர்களை சென்னையில் உள்ள திருமண மண்டபவம் ஒன்றில் நேற்று சந்தித்தார். அங்கே அவர்களுடன் உரையாடியும், புகைப்படமும் எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தார். அவர்களுடன் சூர்யா பேசியவை இதோ…
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Lokesh_Kanagaraj_m.jpg)
”தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம். நீங்க எல்லோரும் ரத்த தானம் செய்ததில் ரொம்பவே சந்தோஷப்படுறேன். ரத்த தானத்தை நானும் தொடர்ந்து செய்திட்டு இருக்கேன். இனி வரும் என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், உங்களுடன் சேர்ந்து நானும் ரத்த தானம் பண்ணுவேன். படப்பிடிப்பில் இருந்தாலும்கூட, அங்கே ஒரு மருத்துவ முகாம் ஏற்படுத்தி, உங்களுடன் ரத்த தானம் பண்ணுவேன் என்பதை உறுதி கூறுகிறேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/56997_thumb.jpg)
நாம செய்யுற வேலையில் வெற்றி என்பதை விட, குடும்பத்தில் மகனாக, அப்பாவாக என குடும்பத்தையும் நல்ல விதமாக கவனிப்பதுதான் உண்மையான வெற்றியாக முடியும். உங்கள் குடும்பத்திற்கும் நேரம் ஒதுங்குங்கள்.” என்ற சூர்யாவை பார்த்து ரசிகர்கள் ‘ரோலக்ஸ்’… ‘ரோலக்ஸ்’ என குரல் எழுப்பினார்கள். உடனே சூர்யாவின் பேச்சு லோகேஷ் கனகராஜ் பற்றி திரும்பியது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Screenshot_2023_08_11_095029.png)
”படப்பிடிப்பிற்காக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, அதே ஹோட்டலில் லோகேஷும் தங்கியிருந்தார். அவர் ஏற்கெனவே அவரது ‘இரும்புக்கை மாயாவி’யின் கதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் ‘ரோலாக்ஸை வைத்து முழுக்கதையும் தயார் செய்திருக்கிறார். லோகேஷ் அவரது கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு நம்ம படத்தை ஆரம்பிப்பார். லோகேஷன் கதைகளில் எதில் நான் முதலில் நடிக்க வேண்டும் என விரும்புறீங்க? ‘ரோலக்ஸ்’ கதையா? அல்லது ‘இரும்புக்கை மாயாவி’யா? என ரசிகர்களைப் பார்த்துக் கேட்டார் சூர்யா.
அதற்கு ரசிகர்கள் ”’ரோலக்ஸ் கதை” என்று சொல்லவும், சிரித்துக் கொண்டே ‘அப்படியே பண்ணிடலாம்’ எனச் சொல்லிவிட்டு, ”இரும்புக்கை மாயாவி’யும் பிரமாண்ட படம் தான்” என்றார். ரசிகர்கள் ‘சுதா கொங்கரா பட அப்டேட்டைக் கேட்டதும், ”வேலைகள் நடந்துட்டு இருக்கு. அக்டோபரில் அதன் படப்பிடிப்பு துவங்கும். அதேபோல வெற்றிமாறன் ‘விடுதலை2’வை முடித்துவிட்டு வந்த பிறகு ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்குவார். உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லிக்க விரும்புறேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/__3443.jfif.jpeg)
நான் மும்பையில் செட்டில் ஆனதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. நான் சென்னையில் தான் இருக்கேன். பசங்க அங்கே படிக்கிறதால, அடிக்கடி போய் பார்த்துட்டு வர்றேன். மத்தபடி சென்னையில் தான் இருக்கேன். வாழ்க்கையில புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே இருங்க. நான் இப்ப மாதவன்கிட்ட (நடிகர்) கோல்ஃப் விளையாட கத்துக்கிட்டிருக்கிட்டிருக்கேன். ‘கங்குவா’ படம் ஷூட்டிங் போயிட்டு இருக்கு கதையா கேட்டதை விட படப்பிடிப்பு பிரமிக்க வைக்குது. எல்லாரையும் திருப்தி படுத்தும் படமா நிச்சயம் இருக்கும்.” என மனம் திறந்திருக்கிறார் சூர்யா.