அடுத்த வருஷம் மோடிக்கு சுதந்திர தினம் அவரு வீட்டுல தான்… மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு!

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், எங்களின் செயல்பாடுகளின் சிறப்பாக இருந்த காரணத்தால் 2019ல் நாட்டு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பளித்தனர். எங்களின் 2வது முறையாக ஆசிர்வதித்தனர். அடுத்த 5 ஆண்டுகள் எதிர்பார்க்காத மிகப்பெரிய வளர்ச்சியை கண்டீர்கள்.

இந்தியாவின் வளர்ச்சி

2047ல் நமது கனவு நனவாகும் பொன்னான தருணத்திற்கான அச்சாரம் அடுத்த 5 ஆண்டுகளில் போடப்படும். அடுத்த முறை ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் கொடியேற்றும் போது நம் நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் ஆகியவற்றின் பட்டியலை உங்கள் முன் சமர்பிப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் 2023: மூன்று கருத்துக்கணிப்பு முடிவுகள்… NDAவா, INDIAவா? யாருக்கு எத்தனை சீட்?

கார்கே விமர்சனம்

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய
காங்கிரஸ்
கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் வெற்றி, தோல்வி என்பது மக்களின் கைகளில், அதாவது வாக்காளர்களின் கைகளில் தான் இருக்கிறது. 2024ல் மீண்டும் தேசிய கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடி கூறுவது ஆணவம். சுதந்திர தின நாளில் கூட எதிர்க்கட்சிகளை பற்றி கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆட்சி மாற்றம்

இப்படி இருந்தால் நாட்டை எப்படி கட்டமைப்பார் எனக் கேள்வி எழுப்பினார். அடுத்த ஆண்டு கொடியேற்றலாம். மோடி அவர் வீட்டில் தான் கொடியேற்றுவார் பாருங்கள் என்று ஆட்சி மாற்றம் நிகழும். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என சூசகமாக தெரிவித்தார். முன்னதாக செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி எழுப்பிய கேள்விக்கு, எனக்கு கண்ணில் பிரச்சினை.

செங்கோட்டைக்கு ஏன் செல்லவில்லை

அதுமட்டுமின்றி காலை 9.20 மணிக்கு எனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினேன். அதன்பிறகு காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று கொடியேற்றினேன். செங்கோட்டையில் பிரதமர் புறப்படும் வரை யாரையும் வெளியே விட மாட்டார்கள். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அப்படி ஒரு சூழலில் என்னால் குறித்த நேரத்தில் வர முடியாது. எனவே தான் செங்கோட்டைக்கு செல்வதை தவிர்த்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

நேருவின் புகழ்

முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பற்றி பேசினார். முன்னாள் பிரதமர்
நேரு
குறித்து பேசும் போது, இரும்பு ஆலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வேலைவாய்ப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தந்தவர். மேலும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், இஸ்ரோ, அணு ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அடித்தளம் போட்டவர் எனப் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.