"ஆளுநர் திமிராக பேசி வருகிறார்".. தமிழ் மக்களின் மனநிலை தெரியவில்லை.. ஆவேசமாக பேசிய உதயநிதி

சென்னை:

விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திமிர்த்தனமாக பேசி வருவதாகவும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர்

கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் மையத்திலும் அவர் இணைந்து படித்து வந்திருக்கிறார். இந்த சூழலில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால் விரக்தியின் விளிம்புக்கே சென்ற ஜெகதீஸ்வரன், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவரது தந்தையும் நேற்று இரவு அதேபோல தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.

நீட் தேர்வால் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் தந்தை, “எப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும்?”5 என கேள்வியெழுப்ப, அதற்கு ஆளுநர், “நீட் விலக்கு மசோதாவில் நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்” எனக் கூறினார்.

இதனால், மாணவன் ஜெகதீஸ்வரன் தற்கொலையை அடுத்து ஆளுநர் ரவிக்கு ஒருதரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆளுநரின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால் ஒன்றிய பாஜக அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இரண்டு முறை இதுதொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள ஆளுநரோ, தமிழக மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட, நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என்று ரொம்ப திமிராக அவர் பேசிருக்காரு. இதிலிருந்தே அவரின் அறியாமை வெளிப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும். ராகுல் காந்தி கூட தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வேண்டாம் என கூறும் மாநிலங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் உரிமை வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார். எனவே, மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தவறான முடிவை யாரும் எடுக்க வேண்டாம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.