இவர் என்ன விளையாட்டு பயிற்சியாளரா? மா.சுவை விமர்சித்த எடப்பாடி – உடனே பதிலடி தந்த அமைச்சர்!

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக தமிழக அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் பல்வேறு சாதனைகளை அரங்கேற்றுகின்றனர். அதே சமயம் அவ்வப்போது நிகழும் சில மோசமான சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

கால்பந்து வீராங்கனையின் கால் போனது பின்னர் உயிர் போனது, சிறு குழந்தையின் கை பறிபோனது, பின்னர் உயிர் போனது, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற போன குழந்தைக்கு வெறிநாய்க் கடிக்கான வைத்தியம் பார்த்தது என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபகாலமாக கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான

மருத்துவத்துறை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மையை ஆராயாமல் கையில் கிடைக்கும் மருந்தை செலுத்துவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதை கவனிக்க வேண்டிய துறையின் அமைச்சருக்கோ ஓட்டப் பந்தயங்களை தொடங்கி வைக்கவே நேரம் போதவில்லை. விளையாட்டுத்துறை பயிற்சியாளராக அவர் வலம் வருகிறார் என்று விமர்சித்தார்.

தமிழக அரசின் புதிய மருத்துவ திட்டம்

இது போன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும், என்றும் அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். “எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையை பார்க்கும் போது, இவர் எப்படி முதலமைச்சராக இருந்தார் என தோன்றுகிறது. கேரளாவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் தினந்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றனர்.

ஒரு சின்ன விஷயத்தை சரியாக பார்க்கும் தன்மை எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. விளையாட்டுத்துறை பயிற்சியாளர் என என்னை விமர்சித்ததற்கு அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.