![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/NTLRG_20230814182710961729.jpg)
ஜவான் – இரண்டாவது பாடல் வெளியீடு
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'ஜவான்'. நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் உடன் சிறப்பு வேடத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்., 7ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தற்போது இரண்டாவது பாடலை தமிழில் (ஹையோடா), ஹிந்தியில் (சல்லியா), தெலுங்கில் (சலோனா) இன்று(ஆக., 14) வெளியிட்டுள்ளனர். ஷாரூக்கான், நயன்தாரா இடையில் உள்ள காதல் பாடலாக வெளியாகி உள்ளது.