![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/NTLRG_20230814121108392501.jpg)
தனுஷூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்தனர். சமீபத்தில் தனுஷ் 51வது படமாக சேகர் கம்முலா இயக்கும் படம் உருவாகிறது, இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ராஷ்மிகா தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததைத் தொடர்ந்து இப்போது தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.