தமிழ்நாட்டில் ஐந்து ஊர்களில் மெட்ரோ: சேலம், திருச்சியில் நடைபெறும் முக்கிய பணி!

தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மூன்று வழித்தடங்களுக்கான பணிகள் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி திட்டமிட்டபடி தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள முடிகிறது.

மதுரை, கோவை மெட்ரோமெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நகரங்களுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசும், மெட்ரோ நிர்வாகமும் திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை ஆகிய இரு மாநகராட்சிகளிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி, சேலம் மெட்ரோஇந்நிலையில் மேலும் இரண்டு மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து தமிழக அரசிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது.
சேலத்தில் 40 கி.மீ, திருச்சியில் 38 கி.மீதிருச்சி, சேலம் மெட்ரோ ரயில் திட்ட சாத்தியக் கூறு அறிக்கை ஆகஸ்ட் இறுதியில், தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக தரப்பு தெரிவிக்கிறது. சேலத்தில் 40 கி.மீ தூரத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுவது குறித்தும், திருச்சியில் 38 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுவது குறித்தும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரத்தில் கூறுகின்றனர்.
எந்தெந்த இடங்களில் ரயில் நிலையங்கள்?இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் தலா இரண்டு வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கு எந்தெந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கலாம், எந்தப் பகுதிகளில் பாலம் அமைக்கலாம், எந்த பகுதிகளில் சுரங்கம் அமைக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்கிறார்கள். இதனால் இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை, மதுரை மெட்ரோ பணிகள்!​​
கோவை, மதுரையைப் பொறுத்தவரை அங்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்த திட்ட அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையை ஆய்வு செய்து வரும் நிலையில் விரைவில் அடுத்தடுத்த பணிகள் வேகம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.