வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டின் முதல் தொழில்முறை கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்ற முகமது ஹபீப் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
![]() |
இந்திய கால்பந்து ஜாம்பவான் என்றழைக்கப்படும் முகமது ஹபீ்ப் ஐதராபாத்தை சேர்ந்தவர் கடந்த 1960 ம் ஆண்டு முதல் 70 வரையில் மோகன்பாகன் மற்றும் ஈஸ்ட்பெங்கால் உள்ளிட்டகால்பந்து அணிகளை பிரபலப்படுத்தியவர் என்ற பெருமை கொண்டவர். 1970-ல் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு அணிக்கு வெண்கலப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். மேலும் நாட்டின் முதல் தொழில் முறை கால்பந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹபீப் ஹல்டியாவில் உள்ள இந்திய கால்பந்து சங்க அகாடமியின் தலைமைப்பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
1977 ல் கோல்கட்டாவில் நடைபெற்ற காஸ்மோஸ்கிளப் அணியும் மோஹூன்பாகன் அணியும் மோதின . காஸ்மோஸ் கிளப் அணி சார்பில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான பீலே கார்லோஸ் ஆல்பர்டோ ஜார்ஜியோ சினாக்லியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோஹூன் பாகன் அணியில் முகமது ஹபீப் இடம் பெற்றிருந்தார். அந்த போட்டியில் இரு அணியும் 2-2 சம நிலை பெற்றது. இவரது ஆட்ட திறைமையை கண்ட பீலே ஹபீபை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
ஐதராபாத்தில் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்த முகமது ஹபீப் பார்கின்சன் நோயால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனது 74 வயதில் மரணம் அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement