பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்: பத்து நாள்களில் அமல் – தமிழக அரசு அறிவிப்பு!

குடும்ப சூழல், பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரம், வறுமை என பல்வேறு காரணிகளால் பள்ளி செல்லும் குழந்தைகள் காலை உணவை உட்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. பாடங்களை கற்றுக் கொள்வதிலும் தடை ஏற்படுகிறது.

இதைப் போக்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக பிற பகுதிகளுக்கும் விரிவிபடுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளித்து தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்ந்த நிலையில் காலை உணவுத் திட்டத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

நாகை: பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் கொடுத்த உண்டியல்.. எதற்காக தெரியுமா.?

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வரும் நிலையில் இதை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதற்கான அறிவிப்பை இன்று முதலமைச்சர்

தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும், 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கலைஞர் கல்வி பயின்ற திருக்குவளைப் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட உள்ளது. இதற்காக இந்த நிதியாண்டில் 404 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.