பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன ரெண்டே பாயிண்ட்… பேச்சே கிடையாது, இனிமே வீச்சு தான்!

”ஏங்க?” என தனது டிரேட் மார்க் புன்னகையுடன் செய்தியாளர்களை பார்த்து இரண்டே பாயிண்ட்டில் சுருக்கென்று பதிலை தெரிவித்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மதுரையில் 77வது சுதந்திர தின விழாவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் இன்று (ஆகஸ்ட் 15) காலை கலந்து கொண்டார். இதை முடித்து விட்டு வெளியே வரும் போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பேருந்தில் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

பிடிஆர் ஆடியோ சர்ச்சை

சமீப காலமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சீண்டி கொண்டே இருப்பது எதிர்க்கட்சியான அதிமுக அல்ல. தமிழக பாஜக தரப்பு தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் மாநிலத் தலைவர் அண்ணாமலை. திமுகவின் முதல் குடும்பம் சம்பாதித்த பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து, அதை பாதுகாக்க செய்யும் போராட்டம் எனப் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. இதை திட்டமிட்டே செய்தது பாஜக தரப்பு தான் எனக் கூறுகின்றனர்.

நிதித்துறை அவுட், ஐடி துறை இன்

டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரை போட்டு வாங்குவது போல பேச வைத்து, அதை ஆடியோவாக ரகசியமாக ரெக்கார்ட் செய்து ஒவ்வொன்றாக வெளியிட பாஜக தரப்பு திட்டமிட்டதாக அப்போதே பேச்சு எழுந்தது. இது ஒருபுறமிருக்க, அமைச்சர் பேசியது சரியா? இல்லையா? எனப் பெரிய விவாதமே வெடித்தது.

மறுபுறம் பிடிஆருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். இந்த விஷயம்

தலைமைக்கு நெருக்கடியாக மாற நிதித்துறையை வாங்கிக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப துறையை கொடுத்துவிட்டனர்.

சீண்டும் பாஜக

இதை வைத்தே ஆடியோவில் பேசியதை உண்மை தான் என ஒரு கூட்டமே சமூக வலைதளங்கள் முதல் மேடை பேச்சு வரை ரவுண்ட் கட்டி வலம் வந்து கொண்டிருக்கிறது. மாதங்கள் கடந்தாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சீண்டுவதை மட்டும் பாஜக தரப்பு நிறுத்தவில்லை.

அண்ணாமலை நடைபயணம்

தற்போது ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் மாநிலம் தழுவிய நடைபயணத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார். செல்லும் வழியெங்கும் மைக்கை பிடித்தாலே திமுக மீதான காரசாரமான விமர்சனக் கருத்துகள் தெறிக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் இரண்டு, மூன்று முறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி அண்ணாமலை பேசியிருப்பதாக தெரிகிறது.

பழனிவேல் தியாகராஜன் பதில்

இதற்கு தான் இன்றைய சுதந்திர தின விழாவின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார். அவர் சொன்னது இரண்டே விஷயங்கள் தான். அதற்கு மேல் கேள்வியே கேட்க முடியாது எனக் கூறும் அளவிற்கு செய்தியாளர்களை ஆஃப் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். அவர் சொன்ன விஷயங்கள்,

அமைச்சர்களுக்கு எந்த பொறுப்பு சரி என்று முதலமைச்சர் நினைக்கிறாரோ, சொல்கிறாரோ அந்த பணியை செய்கிறோம்.முந்தைய துறையில் சிறப்பாக செயல்பட்டேன். இந்த துறையிலும் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிறப்பான பணி

இப்படித் தான் பதிலளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவையும், அண்ணாமலை பேசியதையும் வெட்டி ஒட்டி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் தலைசிறந்த அமைச்சர்களில் முன்னணியில் இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எனப் பலரும் கூறுகின்றனர். அவரது திறமையான செயல்பாடுகள் தற்போதைய துறையிலும் தொடர வேண்டும் என்பது திமுக உடன்பிறப்புகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பலரது கோரிக்கையாகவும் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.