புர்ஜ் கலிபாவில் கொடி காட்டாததால் பாக்., மக்கள் ஏமாற்றம்: வீடியோ வைரல்| People disappointed at Burj Khalifa for not displaying Pakistan flag: Video goes viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துபாய்: உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான புர்ஜ் கலிபாவில் பாக்., தேசிய கொடியை காண்பிக்காததால் அந்நாட்டு மக்கள் ஏமாற்றம் அடையும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

latest tamil news

பாகிஸ்தானின் சுதந்திரதினம் ஆக.,14 ம் தேதி கொண்டாடப்பட்டது. துபாயில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகினர். இதற்காக புர்ஜ் கலிபா கட்டடத்தின் முன்னதாக குவிந்தனர். இந்த கட்டடம் உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றாகும். அது மட்டுமல்லாது உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் மற்றும் தினங்கள் குறித்தவற்றை கட்டடத்தில் பிரதிபலிப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் தங்கள்நாட்டின் தேசிய கொடியை புர்ஜ் கலிபாவில் காண்பிப்பார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருந்த பாக்., மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் பாக்., மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும்,தொடர்ந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது.

latest tamil news

இச்சம்பவம் குறித்து பாக்., பெண்மணி ஒருவர் கூறுகையில், பாக்., தேசிய கொடி காட்டாதது வருத்தமளிக்கிறது. பாக்., மக்களின் மீதான வெறுப்பை இது காட்டுவதாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.