முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவின் அரசியல் வருகையும், ”எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை” என்ற பெயரில் தொடங்கிய அரசியல் கட்சியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2017, 2018 காலகட்டத்தில் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டார். இதற்கிடையில் பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைய களம் மாறியது. ஜெ.தீபாவின் ஆதரவாளர்கள் அணி மாறினர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த அரசியல் ஆட்டங்கள்
போயஸ் கார்டன் இல்லம்
கடைசியாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் வாரிசுரிமை சட்டத்தின் படி, ஜெ.தீபா வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இவரது பராமரிப்பில் தான் போயஸ் கார்டன் உள்ளது. ஜெயலலிதா அரசியல் களத்தில் இருந்த போது போயஸ் கார்டன் கோட்டை போன்று கம்பீரமாக காட்சி அளித்தது. ஜெயலலிதாவை காண மணிக்கணக்கில் அரசியல் தலைவர்கள் காத்திருந்த நிகழ்வுகள் உண்டு. தற்போது கேட்பாரற்று மிகவும் அமைதியான பகுதியாக காணப்படுகிறது.
சுதந்திர தின விழா
இந்நிலையில் 77வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜெ.தீபா தேசிய கொடியை ஏற்றி வைக்க போயஸ் கார்டனுக்கு நேரில் சென்றார். அங்குள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் கணவர் மாதவனும் இருந்தார். பின்னர் தேசிய கொடி ஏற்ற சென்ற போது தீபாவின் தம்பி தீபக் அங்கு வந்தார். தீபா தேசிய கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
தீபா, தீபக் சண்டை
சிறிது நேரத்திற்கு பின்னர் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இதனால் சர்ச்சை ஓய்ந்து தேசிய கொடியை தீபா ஏற்றி வைத்தார். போயஸ் கார்டனில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்த சென்ற போது, அர்ச்சகர் உரிய மரியாதை தரவில்லை என்று மற்றொரு சர்ச்சை வெடித்தது. தீபாவிற்கு ஆதராக அவரது ஆதரவாளர்கள் வந்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஒருவழியாக சலசலப்பு முடிவுக்கு வந்தது.
தீபக் என்ன சொன்னார்?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, போயஸ் கார்டன் இல்லம் எனக்கும், என் தம்பிக்கும் சேர்த்து தான் வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டது. இன்று தேசிய கொடி ஏற்ற வந்த போது என் தம்பி தீபக் வந்து தகராறு செய்தார். இந்த இல்லத்திற்குள் வரக் கூடாது.
கொடநாடு விவகாரம்
தேசிய கொடி ஏற்றக் கூடாது எனக் கூறி தகராறு செய்ததாக குறிப்பிட்டார். கொடநாடு வழக்கில் உரிய விசாரணை வேண்டும் என்று
, டிடிவி தினகரன் கைகோர்த்து போராட்டம் நடத்தியது பற்றிய கேள்விக்கு, அந்த குடும்பமே கொடநாடு விஷயத்தில் ஈடுபட்டது. அப்படி இருக்கும் போது ஓபிஎஸ் கைகோர்த்தது நல்லதல்ல.
ஜெயலலிதா சம்பவம்
1989ல் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு நடந்த விஷயங்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது பற்றிய கேள்விக்கு, மறைந்த பின்னர் அவரை பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அவர் நாட்டிற்கே எத்தனையோ நல்லது செய்திருக்கிறார். பெண்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதைப் பற்றி பேசினால் நல்லது என்று ஜெ.தீபா தெரிவித்தார்.