மகளிருக்கு மாதம் 2000 ரூபாய்: பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்!

மகளிருக்கு மாதம் 2000 வழங்கும் வகையில் கர்நாடகா அரசு அறிவித்துள்ள க்ருக லட்சுமி திட்டத்தில் மேலும் பயனாளர்களை இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

நாளை ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட இருந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

க்ருக லட்சுமி திட்டம் – எதற்காக?

பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் மாதம் தோறும் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து ஊர்களில் மெட்ரோ: சேலம், திருச்சியில் நடைபெறும் முக்கிய பணி!

சுமார் 1.28 கோடி பெண்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் தொடக்கவிழா தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து டி.கே.சிவக்குமார் கூறும்போது, மேலும் அதிக பெண்களை இத்திட்டத்தில் பயனாளர்களாக இணைக்க இருப்பதால் தள்ளிப் போனதாக தெரிவித்தார்.

30 ஆயிரம் கோடி ரூபாய்!

கர்நாடகா மாநிலம் பெல்கவியின் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறும் இத்திட்ட தொடக்க விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலம் முழுவதும் 11ஆயிரம் இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் இந்த திட்டத்திற்கு பதிவு செய்யலாம். https://sevasindhu.karnataka.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்வதோடு தமது விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் விண்ணப்பதாரர்கள் இந்த தளத்தில்யே பார்த்திக் கொள்ளலாம்.

யார் யாருக்கு வாய்ப்பு?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

க்ருக லட்சுமி திட்ட உதவிக்கு!

உதவி எண்:
1902, 8147500500

விண்ணப்பம் தொடர்பான உதவிக்கு:
08022279954, 8792662814, 8792662816 இந்த எண்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.