மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூரச் செயல் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மணிப்பூரின் சில பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/N_Biren_Singh_manipur.jpg)
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கொடியேற்றிய பிறகு, உரையாற்றினார். அப்போது பேசியவர், “மணிப்பூரில் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், மாநிலம் முழுவதும் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் முயன்றுவருகிறோம். சில தவறான புரிதல்கள், சுயநலச் செயல்கள், நாட்டைச் சீர்குலைக்கும் வெளிநாட்டு சதிகளால் விலைமதிப்பற்ற உயிர்கள், சொத்துகளை இழந்து பலர் நிவாரண முகாம்களில் வாழ்கின்றனர். இயல்புநிலை திரும்பவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கவும் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மக்கள் விரைவில் அவரவர் பகுதிகளில் மீள்குடியேற்றப்படுவார்கள். உடனடியாக சொந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியாதவர்கள் தற்காலிக வீடுகளுக்கு மாற்றப்படுவார்கள். நாம் மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/N_Biren_Singh_cm.jpg)
அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை, அத்தகைய செயலை ஒருபோதும் செய்யாது. போதைப்பொருள் மீதான போர் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது நபர்களையோ இலக்காகக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தேசத்தையும் வருங்கால சந்ததியையும் போதைப்பொருளின் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.
2017-ம் ஆண்டு முதல், பா.ஜ.க அரசு மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்துகொண்டு மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கசகசா சாகுபடிக்காக பரவலாக காட்டை அழிப்பதையும், போதைப்பொருள் சாகுபடிகளையும் அரசு வெறுமனே பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மேலும் நாட்டின் இளைஞர்களை போதைப்பொருளிலிருந்து மணிப்பூர் பாதுகாத்து வருகிறது. காடழிப்பு மணிப்பூரின் காலநிலை சூழல்களை பாதித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs