Jailer: கலக்கிட்டீங்க.. 'ஜெயிலர்' வெற்றி: நண்பர் ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் எப்படிப்பட்ட ஹிட் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். அந்தளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ரஜினி ரசிகர்களோ ரியல் பாக்ஸ் ஆபிஸ் கிங் ரிட்டர்ன் என கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான படங்கள் அந்தளவிற்கு வரவேற்பை பெறாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். எங்களோட பழைய தலைவரை யாராவது மறுபடியும் அதே மாதிரி காட்டிட மாட்டார்கள் என ரசிகர்கள் ஏங்கினார்கள். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரசிகர்களின் ஏக்கம் பல மடங்கு எகிறியது. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்ககிய நம்ம நெல்சன் திலிப்குமாருடன் இணைந்தார் ரஜினி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த கூட்டணி ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பினாலும் நாளாக நாளாக ஒரு வித பயத்தை உண்டு பண்ணியது ரசிகர்களுக்கு. அதற்கு காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் ரிசல்ட். ஆனாலும் தன்னுடைய முந்தைய படத்தில் விட்டதை, இந்தப்படத்தில் எப்படியாவது தட்டி தூக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வந்தார் நெல்சன்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரஜினி, நெல்சன் இருவருக்குமே தரமான கம்பேக்காக அமைந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. ரஜினியின் ஸ்டைல், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என பக்காவான கமர்ஷியல் பேக்கேஜாக வெளியாகி உலகளவில் வசூலை குவித்து வருகிறது ‘ஜெயிலர்’.

Jailer: குடும்பத்துடன் தலைவர் படம் பார்க்க வந்த ஷாலினி அஜித்: ‘ஜெயிலர்’ அலப்பறை..!

இதனிடையில் படத்தின் வெற்றி காரணமாக திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் உலக நாயகன்
கமல்
, தன்னுடைய நண்பர் ரஜினியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் அலைப்பேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார் கமல். இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி ‘விக்ரம்’ படம் ஹிட்டடித்த போதும், இதே போல் கமலுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நட்பு மாறாமல் இருவரும் ஒருவருடைய வெற்றிக்கு மற்றொருவர் வாழ்த்து தெரிவித்து வருவதை ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றன. முன்னதாக ‘ஜெயிலர்’ பட ரிசல்ட் வந்தவுடனே நடிகர் விஜய் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leo: ‘ஜெயிலர்’ கொண்டாட்டத்துக்கு இடையில் வெளியாகும் ‘லியோ’ அப்டேட்: சம்பவம் இருக்கு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.