Leo: 'லியோ' அர்ஜுனின் ஹரோல்ட் தாஸ் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்: ஏன் தெரியுமா.?

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தில் அவரின் ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளம் முழுவதையும் ‘ஜெயிலர்’ படம் தொடர்பான பேச்சுக்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், போட்டிக்கு நாங்களும் வரலாமா என தற்போது விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளனர். அப்படி என்ன விசேஷம் என்று பார்த்தால், இன்று ‘லியோ’ படத்தில் நடித்துள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவரின் கதாபாத்திரம் தொடர்பான அதிரடியான அப்டேட் ஒன்றை வெளியிட்டு மிரட்டியுள்ளது ‘லியோ’ படக்குழு.
மீண்டும் இணைந்த கூட்டணிகோலிவுட் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னனான விஜய் ‘வாரிசு’ என்ற பேமிலி டிராமா படத்திற்கு பிறகு ‘லியோ’ படம் மூலமாக அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார். இந்தப்படத்தின் வாயிலாக இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். ஏற்கனவே ‘மாஸ்டர்’ படம் மூலமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சஞ்சய் தத்’லியோ’ படத்தில் கேஜிஎப் வில்லன் நடிகர் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனனுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்துள்ளார். இதனிடையில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் அவரின் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர். இதனையடுத்து இன்று அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியாகும் என நேற்றிலிருந்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்க ஆரம்பித்தனர்.
ஹரோல் தாஸ்இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யும் விதமாக ‘லியோ’ படத்தின் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கான மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் இரத்தம் தெறிக்க தெறிக்க அனல் பறக்க மிரட்டலான லுக்கில் அர்ஜுன் காட்சியளிக்கும்மாஸான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
ஸ்பெஷல் கொண்டாட்டம்’லியோ’ படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், இதுவரை அர்ஜுனின் எந்த போட்டோவும் இணையத்தில் கசியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு முதன்முறையாக அவர் கதாபாத்திரத்திற்கான மிரட்டலான வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் ஹரோல்ட் தாஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை ஸ்பெஷலாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.