Leo: 'லியோ' படம் பற்றி பேசி பதறிய மன்சூர் அலிகான்: சஸ்பென்சை உடைச்சுட்டீங்களே அண்ணா.!

‘லியோ’ படம் குறித்த அப்டேட்களை பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனாலும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சில பேட்டிகளில் தொகுப்பாளர்களின் எடக்கு மடக்கான கேள்விகளால் ‘லியோ’ பட ரகசியங்களை உளறி விடுகின்றனர். இதனால் படத்தில் நடித்துள்ளவர்கள் ‘லியோ’ பட ரிலீஸ் வரை பேட்டி கொடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய்யும், லோகேஷ் கனகாரஜும் சேர்ந்து செய்துள்ள சம்பவம் தான் ‘லியோ’. இந்தப்படத்தை ஏன் சம்பவம் என சொல்றோம் என்றால் அதற்கு நாம் கொஞ்சம் பின்னாடி போய் பார்க்க வேண்டும். அப்படி போய் பார்க்கும் போது இந்த கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை அலசி ஆராய வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்த படம். ஆனாலும் இந்தப்படத்தில் லோகேஷ் கனகராஜின் டச் கொஞ்சம் மிஸ் ஆகி விட்டது. போதாக்குறைக்கு விஜய் சேதுபதி வேறு படத்தில் மிரட்டி விட்டார். இதனால் எங்களுக்கு முழுக்க முழுக்க லோகேஷ் பாணியில் ஒரு விஜயண்ணா படம் வேண்டும் என தளபதி ரசிகர்கள் அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

அவர்களுக்காகவே தற்போது ‘லியோ’ உருவாகியுள்ளது. மாஸ்டரை போல் இல்லாமல் லியோ 100% தன்னுடைய படம் என பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜும் உறுதி செய்துள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரமே இந்தப்படத்திற்காக வெறித்தனமாக வெயிட் பண்ணி வருகிறது. இந்நிலையில் தான், லோகேஷ் கனகராஜுக்கு பிடித்தமான நடிகரான மன்சூர் அலிகான் நேர்காணல் ஒன்றில் பேசும் போது ‘லியோ’ பட சீக்ரெட்டை பட்டென உளறிவிட்டார்.

Captain Miller: ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு எகிறும் திடீர் எதிர்பார்ப்பு: காரணம் ‘ஜெயிலர்’.!

அது என்னவென்றால், நான் பேப்பர்ல முதல் நாள் சாயங்காலம் ஒரு நியூஸ் படிக்கிறேன். லோகேஷ் கனகராஜ் படத்தில் ஒரு பிரேமிலாவது நடித்து, அவருடைய படத்தில் செத்திடனும்னு அனுராக் காஷ்யப் பேசியிருந்தார். மறுநாள் பார்த்தால், கேரவன்ல உட்கார்ந்து இருக்காரு. என்ன நடிச்சாருன்னு தெரியலை. வந்தாரு, சுட்டாரு. போய்ட்டாரு என பேசிட்டு இருக்கும் போதே பதறிவிட்டார் மன்சூர் அலிகான்.

அடடே ‘லியோ’ அப்டேட்டை உளறி விட்டோமே என உஷாராகி இனிமே எதையும் சொல்ல மாட்டேன் என கூறிவிட்டார். முன்னதாக லியோவில் பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யூப் நடித்துள்ளார் என இணையத்தில் செய்திகள் பரவியது. அதனை தற்போதைய பேட்டி மூலம் உறுதி செய்துவிட்டார் மன்சூர் அலிகான். இந்த பேட்டியை பார்த்த தளபதி ரசிகர்களோ இப்படி ஒரு முக்கியமான சஸ்பென்சை உடைச்சுட்டீங்களே அண்ணா என வருத்ததுடன் கூறி வருகின்றனர்.

Jailer: கலக்கிட்டீங்க.. ‘ஜெயிலர்’ வெற்றி: நண்பர் ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.