Mahindra Pik up Concept – மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் கான்செப்ட் அறிமுகமானது

விற்பனையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ N எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட பிக்கப் மாடல் டிரக் மிக நேர்த்தியான அற்புதமான முரட்டுதனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக வந்துள்ளது.

பிக்கப் கான்செப்ட்டில் இரண்டாம் தலைமுறை mHawk டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மிக சிறப்பான டார்க் வெளிப்படுத்தும் வகையில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது.

Mahindra Pikup Concept

ஸ்கார்பியோ N எஸ்யூவி மாடலை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள Pik up கான்செப்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், பானட், ஃபெண்டர்கள் மற்றும் முன்புற கதவுகள் என அனைத்தும் ஸ்கார்பியோவை அடிப்படையாகவே பெற்றுள்ளது.

மிகப்பெரிய பம்பர்  மற்றும் கீழே அமைந்துள்ள இழுவை கொக்கிகள் பெற்றதாக கம்பீரமான மற்றும் முரட்டுதனத்தை வெளிப்படுத்தும் நோக்கில் உள்ளது. இரண்டு கேபின் பெற்ற இந்த கான்செப்ட் நிலை மாடலில் சன் ரூஃப், பின்புற லோடு பெட்டில் இரண்டு டயர்கள் இடம்பெற்றுள்ளது.

Pik Up மாடலில் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் Level-2 ADAS திறன் மற்றும் 5G  இணைப்பு அம்சங்களை பெற உள்ளதாக மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை mHawk டீசல் எஞ்சின் முழுமையாக அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AISIN மூலம் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படும். மஹிந்திரா பிக் அப் 4WD மற்றும் ஷிப்ட் ஆன் தி-ஃப்ளை திறனுடன் வரவுள்ளது. Normal, Grass-Gravel-Snow, Mud-Rut மற்றும் Sand நான்கு டிரைவ் மோடுகளும் பெற உள்ளது.

2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு மஹிந்திரா ஸ்கார்பியோ பிக் கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Mahindra Scorpio N pick up concept rear

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.