ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரோட்ஸ்டெர், அட்வென்ச்சர், க்ரூஸர் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் மாடலை டைமண்ட் ஹெட் என்ற பெயரிலும் காட்சிப்படுத்தியது. உற்பத்தி நிலைக்கு 2024 ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
இன்றைக்கு ஓலா நிறுவனம் இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபாரத்தில் S1 Pro gen 2 , S1X மற்றும் S1X+ ஆகிய மாடல்களுடன் மென்பொருளுக்கான Move OS 4.0 மற்றும் 100 சேவை மையங்களை திறந்துள்ளது.
Ola Electric Motorcycle
ஓலா அறிமுகம் செய்துள்ள நான்கு எலக்ட்ரிக் பைக்குகளின் எந்த நுட்பவிபரங்கள் எதுவும் பகிரப்படவில்லை. நான்கு தயாரிப்புகளும் எதிர்கால வடிவமைப்பினை பெற்றதாக உள்ளது. குறிப்பாக மிக நவீனத்துவமான வடிவமைப்பு எதிர்காலத்துக்கு ஏற்றதாக உள்ளது.
ADV ஸ்டைலை பெற்ற மிக நேர்த்தியான கான்செப்ட் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக உள்ள கான்செப்டில் எல்இடி ஹெட்லைட் கொண்டதாகவும், முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் மோனோஷாக், இரு பக்க டயரில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஸ்போக் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற மிக நேர்த்தியான அமைப்பினை கொண்டதாக உள்ளது. எலக்ட்ரிக் பைக் மாடலான யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் மோனோஷாக், இரு பக்க டயரில் டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.
ஹைப்பர் சூப்பர் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றதாக டைமண்ட் ஹெட் ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் பைக் மாடல் மிகப்பெரிய அளவில் எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமைந்துள்ளது. முன்பக்கத்தில் டூயல் டிஸ்க் கொண்டு பின்புறத்தில் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.
க்ரூஸர் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலை பெற்ற ஓலா எலக்ட்ரிக் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் மாடல் நேர்த்தியான வடிவமைத்துள்ளது.