கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சூரிய மின்கலங்களைப் பொருத்த இணக்கம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன்  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் (14) இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சூரிய மின்கலங்களைப் பொருத்துவதற்கு  காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர்,பிரதம செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.