சென்னை:
பட்டியலின மக்களின் குடிசையை கொளுத்துமாறு இளைஞர்கள் சிலரிடம் மஞ்சள் சால்வையை அணிந்த நபர் ஒருவர் பாடம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.
காடடமாக விமர்சித்துள்ளார்.
நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனும், அவனது தங்கையும் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சாதிய வன்மத்தால் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், மஞ்சள் சால்வை அணிந்திருக்கும் ஒரு நபர், தன்னை சுற்றி நிற்கும் இளைஞர்களிடம், “தலித் மக்களின் குடிசை, உடைமைகளை கொளுத்துங்கள்.. அதுதான் அவர்களுக்கு பாதிப்பு.
செய்ததை போல செய்யுங்கள். சும்மா வெட்டுவது, குத்துவது எல்லாம் எந்தப் பயனும் இல்லை” என அவர் கூறுகிறார். இந்த வீடியோ காட்டுத் தீ போல பரவி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவிட்டு இருக்கு. மஞ்சள் சால்வையை போர்த்திகிட்டு இருக்கிற ஒருத்தன் பசங்ககிட்ட சொல்றான்.. “பள்ளர், பறையர் வீடுகளை போய் கொளுத்து. அவங்க உடைமைகளை சேதப்படுத்து.. மற்றபடி யாரையும் கொல்லாத. நாயக்கன்கொட்டாயில் பாமககாரன் பண்ண மாதிரி செய்யணும். ஆட்களை எல்லாம் விரட்டி விட்டுட்டு குடிசையை மட்டும் கொளுத்து” என அவன் சொல்கிறான்.
ஏன் சொத்துகளை மட்டும் சேதப்படுத்த வேண்டும் என்பதற்கு அந்த மஞ்சள் சால்வை விளக்கம் கொடுக்கிறான். “சொத்துகளை சேதப்படுத்தினால் தான், தாங்கள் இழந்த உடைமைகளை திருப்பி வாங்க அந்த மக்களுக்கு 6 மாதங்களாவது ஆகும்.. அப்படிதான் அவனை பலவீனப்படுத்தனும். சும்மா பின்னாடி போய் முதுகுல வெட்டுறதால ஒரு பிரயோஜனமும் இல்லை. வெட்டுன உன்னைதான் போலீஸ் பிடிச்சுட்டு போயிடும்” என அவன் சொல்கிறான். இப்பொழுது உள்ள இளம் தலைமுறை பிள்ளைகளுக்கு ஓபிசி சமூகங்களின் தலைவர்கள் இப்படிதான் பாடம் எடுக்கிறார்கள்.
இந்த நாட்டிலே வெறும் 10 சதவீதம் இருக்கும் உயர்சாதி வகுப்பினர் தான், அனைத்து உயர்ந்த பதவிகளிலும் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள், பாராளுமன்றத்தில் அவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்கள், வங்கிகள் என எல்லா இடத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஓபிசி தலைவர்கள் யாராவது, “உச்ச நீதிமன்றத்தில் ஏன் உயர் சாதியினர் மட்டும் இருக்கிறார்கள்.. ஓபிசி ஏன் பிரதிநிதித்துவம் தரவில்லை” எனக் கேட்டிருக்கிறார்களா? அதை கேட்க எந்த ஓபிசி தலைவர்களும் இல்லை. தன் சமூக மக்களுக்கு சாதி உணர்வை ஊட்டி அவர்களை தீயவழியில் கொண்டு செல்லும் தலைவர்களாகதான் அவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.