![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/NTLRG_20230816105747452878.jpg)
ஜவான் புரோமோ படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ள விஜய்சேதுபதி
நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ, அதன் பலனாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதிவெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இது குறித்த புரோமோக்கள் தொடர்ந்து வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு என தனியாக புரோமோ வீடியோ வெளியாக இருக்கிறது.
இதற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே ஹிந்தியில் ஒன்றிரண்டு படங்களில் மற்றும் வெப் சீரிஸில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் ஷாருக்கானுடன் நடித்துள்ள இந்த ஜவான் படத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு பாலிவுட்டிலும் அவருக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.