வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
“முள்ளும் மலரும்” ஆகஸ்ட் 15 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மகேந்திரன்அவர்களின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய’ முள்ளும் மலரும் ‘நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இசை.. இசைஞானி ஒளிப்பதிவு ஒளிஓவியர் பாலுமகேந்திரா.
இயக்குனர் மகேந்திரன் அன்பான மென்மையானவர் அழுத்தமான படங்களுக்குச் சொந்தக்காரர். இயக்குனர், கதாசிரியர் வசனகர்த்தா ,நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். இவரது இந்த படம்இயல்பான காட்சிகளையே கொண்டிருக்கும். ஆச்சரியப்பட வைக்கும் திரைக்கதை+அதற்கு மிகவும் சரியாக பொருந்தக்கூடிய நடிகர்கள் என தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய படம்.. இப்படத்தின்தனித்துவமான அம்சமே கதாபாத்திர உருவாக்கம்(குறிப்பாக காளியின்)மற்றும் ‘பளிச்’ வசனங்கள் தான்.
தமிழ் சினிமாக்களில் ஆணாதிக்கம்.. பெண்களை அடக்கி ஒடுக்கும் ஆண்கள்.. தேவையற்ற சண்டை காட்சிகள்.. படு அபத்தமான காதல்.. நகைச்சுவை என்ற பெயரில் விரசம்.. என்று சினிமா போய்க் கொண்டிருந்த நேரத்தில் தமிழ் சினிமாவை(முள்ளும்மலரும்) வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றது. இந்தத் திரைப்படம் வெளிவந்து இன்றோடு மிகச்சரியாக 45 வருடங்கள் ஆகிவிட்டது.
ஆனால் இப்போது பார்த்தாலும் இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ,ஒவ்வொரு வசனங்களும், ஒவ்வொரு பாடல்களும் நம் நெஞ்சில் அழியாத கல்வெட்டாய் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” …இயற்கையோடு பெண்ணை ஒப்பிட்டு (எந்த ஒரு ஆபாசமும் இல்லாத ) ரசிக்க வைத்த பாடல் வரிகள் . பால் வடியும் முகத்துடன் சிரித்தபடியே வாயசைக்கும் சரத் பாபு. மறக்க முடியுமா? (சரத் பாபு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இந்தப் பாடல் தான்) இந்த ஒரு பாடல் எல்லா காலகட்டங்களிலும் கேட்கக்கூடிய தமிழ் சினிமாவின்’ மாஸ்டர் பீஸ்’ .
ஷோபாவின் மாறுபட்ட முகபாவனைகள் அழகோ அழகு! இடுப்பில் நீ நிரம்பிய குடத்துடன் நடந்து வரும்போது…ஆற்றில் கால்களை நனைத்தபடி கல் எரியும் லாவகம்..
பூக்களை ரசித்தபடியே புன்னகையுடன் நடக்கறப்ப..முடி காற்றில் அசைந்தாட. அழகான வெட்கம். .. இப்படி பாலு மகேந்திராவின் கேமரா காவியமே படைத்திருக்கும்.
(இந்தப் பாடலில் சரத்பாபுமற்றும் ஷோபாவைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது என்பது இயக்குனரின்வெற்றி ).
“பள்ளம் சிலர் உள்ளம்”.. பாடலிலேயே வாழ்க்கை தத்துவம் .. கவியரசர் தன் பங்குக்கு கெத்து காட்டி இருப்பார்.
ஜீப் ஓடறப்ப ஆடுகளை சிறுவன் ஓட்டி செல்லுவதாய் வரும் காட்சி இயக்குனரின் கற்பனை .செம க்யூட்
“அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்..” பெண்மையை இயற்கையோடு ஒப்பிடும் இந்தப் பாடலைப் போல் இனி ஒரு பாடல் பிறக்கப் போவதே இல்லை .
‘காளி ‘என்ற கதாபாத்திரம் கதாபாத்திரமாகவே நம்மால் கற்பனை செய்ய முடியாது அவர் நம்மில் ஒருவர்.. நாம்தான் அவர் என்றே எண்ணத் தோணும்.
சின்ன சின்ன கோபதாபங்களையும், ஈகோவையும் மிக மிக நுட்பமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.
ஒரு சுய கவுரவம் கொண்ட மனிதனின் வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் மிகுந்த நம்பகத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கும் .(வின்ச் ஆப்ரேட்டர் பற்றி எடுக்கப்பட்ட ஒரே தமிழ் படம்) எளிமையும் யதார்த்தமுமான படத்தில் ரஜினி கண் பார்வையிலேயே காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை.
காளி நல்லவன் ஆனால் சூழ்நிலை காளியை மோசமான மனிதனைப் போல் தோன்றச் செய்கிறது. தவறாக புரிந்து கொள்ளப்படுவதே படத்தின் மைய புள்ளி… அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவ்வப்போது மிக அழகாய் வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி. அழை அதை அழகாய் படம் பிடித்து இருப்பார் இயக்குனர்.
காளி பாத்திரம் வெகு நுட்பமானது. “கெட்ட பய சார் இந்தக் காளி” தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் அழகான வசனம். ஒரு தன்மானம் உள்ள கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு. (சூப்பர் ஸ்டார் ரஜினியை கலைஞனாக மாற்றிய திரைப்படம்)
கோபம் ,பாசம் ,வெறுப்பு இயலாமை எதார்த்தமான நடிப்பில் சிகரத்தை தொட்டிருப்பார் ரஜினி . தன்மானம் உள்ள இளைஞனாக காளிக்கு நிகராக இன்னும் ஒரு கதாபாத்திரம் இதுவரை தமிழ் திரையில் உருவாக்கப்படவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை… “பாடல் 45வருடங்களை கடந்தும் சும்மா” கிழி” தன்மை கொண்ட பாடல்.
(துரோகம், அவமானம், வலி ,வேதனை நம்மை சூழ்ந்திருக்கும் போது போடா ஜூஜூபி என்று நம்மை முன்னோக்கி உந்தி தள்ளும் பாடலிது) இயக்குனர் அதை செதுக்கி நமக்கு கொடுத்தது இன்னும் சிறப்பு . இந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் தலைவரின் வெறித்தனமான ஆட்டம் (மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையை தங்கத் தட்டில் வார்த்து கொடுத்திருப்பார் இசைஞானி).
பயமோ, தோல்வியோ எதைக் கண்டு அஞ்சினாலும் இந்தப்பாடலை ஒரு முறை கேட்டால் நம்மேல் நம்மை அறியாமல் ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும்.(என் மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில்.. இந்தப் பாடலை நான் சத்தம் போட்டு பாட ..அடுத்த நிமிஷம் சோகம் சுகமாகும்) ( ரஜினிக்கு முறையான நடனம் தெரியாவிட்டாலும் இந்தப் பாடலில் அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கும் )
ஷோபாவின் துள்ளலான நடிப்பிற்காகவே…
‘அடிபெண்ணே…
பொன்னூஞ்சல்ஆடும் இளமை.
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே பண்பாடுதே மனம் ஆடுகின்றதே ..’
காலம் கடந்தும் மனதை பண்படுத்தும் பாடல். ஜென்ஸியின் இனிமையானகுரல் ,பாலுமகேந்திராவின்ஒளிப்பதிவு, ஷோபாவின் நடிப்பு, கவிஞர் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வைர வரிகள்… எழில் பொங்கும் காட்சிகள் .எந்த மனநிலையில் இருக்கும்போது கேட்டாலும் பாடலை ரசிக்கத்தோன்றும். பாடலின் துவக்கத்தில் வரும் ஜலதரங்கத்தின் இசை அற்புதம். இசை+இயற்கை கலந்த பாடல்.
வானவில், பூத்துக் குலுங்கும் மலர்கள் ,தொட்டுச் செல்லும் மேகங்கள், பளிங்கு போன்ற நீரோடைகள் ஒவ்வொன்றும் பாலுமகேந்திராவின் கைவண்ணத்தில் ஓவியமாக மிளிரும். பாடலில் ஒவ்வொரு நொடியும் பல்வேறு முக பாவங்களை வெளிப்படுத்துவார் ஷோபா… ஒவ்வொன்றும் ஒரு க்யூட் கவிதையாக இருக்கும்.
“நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா..’
வாழை இலையில் விருந்து படைத்திருப்பார் இயக்குனர் இந்தப் பாடலில் படாபட் ஜெயலட்சுமி தலையில் கனகாம்பரசரம் முகத்தில் ஆடிய படியே காதுகளில் மாட்டல் ஆட கணவனான காளியை ரசித்துக்கொண்டே.. அவரை வம்பு செய்துகொண்டே(வாயசைத்து) பாடியிருப்பார். (ஏதோ நாமே படத்தில் பாடுவது போல் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் இயக்குனர் உணவு வகைகளின் கலாச்சாரத்தை அழகாக புகுத்தி இருப்பார். பாடல் முழுவதும் ‘கடம்’ இசை நம் காதுகளில் தாலாட்டாய்..
‘முள்ளும்மலரும்’நறுமணம்.
ஒரு சூரியன்
ஒரு நிலவு
திரை உலகில் ஒரே ஒரு காளி (முள்ளும் மலரும் காளி) 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில்.. தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு சுதந்திரமாக கொண்டு வந்த ‘முள்ளும் மலரை ‘கொண்டாடி மகிழ்வோம்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரைவேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.