தமிழ் சினிமாவில் பார்ட் 2 கலாச்சாரம் பெருகி வருகிறது. தற்போது வெளியாகும் பல படங்களை இரண்டாம் பாகத்திற்கான லீடுடனே முடித்து வருகின்றனர் இயக்குனர்கள். முதல் பாகம் ஹிட்டடித்தால் இரண்டாம் பாகத்தை இயக்கி விடுவோம் என்ற முடிவுடனே தற்போது படங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை அலற விட்ட சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.
தற்போதைய சினிமாவை பொறுத்தளவில் வெளியாகும் படங்கள் ஒரு வாரம் ஓடினாலே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒருக்காலத்தில் ஒரு படம் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்தது என்று சொன்னால், இன்றைய தலைமுறையினருக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். அப்படி ஒரு சாதனையை படைத்த படம் தான் ‘சந்திரமுகி’.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஜோதிகா, வடிவேலு, பிரபு, நாசர், வினீத், மாளவிகா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த்திருந்தார். ஹாரர் திகில் படமாக வெளியாகி பேய் படங்களுக்கான சீசனையே துவங்கி வைத்தது சந்திரமுகி. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தையில் இருந்தது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ படம் அண்மையில் துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.
Leo: ‘லியோ’ படம் படைத்த வேறலெவல் சாதனை: சொல்லியடித்த விஜய் – அனிருத் காம்போ.!
இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்தப்படத்திற்கான டப்பிங்கில் கலகலப்பை கூட்டியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு. அந்த வீடியோவில், ‘சந்திரமுகி பார்ட் 1, 2, 3… பத்து வரைக்கும் போனாலும் சந்திரமுகி பெஸ்ட் பிரெண்ட் நான் தான்டா என்று வீர வசனம் பேசுகிறார் வடிவேலு. உடனே சந்திரமுகி குரல் கொடுத்து மிரட்டுகிறது.
இதனால் பதறும் வடிவேலு ‘பேசிக்கிட்டிருக்கேன் மாமா’ என சொல்வதை போன்று ‘டப்பிங் கொடுத்திட்டிருக்கேன் மா’ என்கிறார். வடிவேலு அட்ராசிட்டி செய்துள்ள இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி கலாட்டாக்கள் இன்றளவும் மிகவும் பிரபலம். அந்த வகையில் இரண்டாம் பாகத்திலும் அவரின் நகைச்சுவை காட்சிகள் வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
Indian 2: ஆண்டவரே கொல மாஸ்..தரமான சம்பவம்: இந்தியன் தாத்தா இஸ் பேக்.!
மேலும் ‘மாமன்னன்’ படத்தில் வேறு ஒரு மாதிரியான வடிவேலுவை திரையில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தார். இதனையடுத்து அதற்கு நேர் எதிராக ‘சந்திரமுகி 2’ படத்தில் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்தப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.