கேரள மாநிலம் பாலக்காடு அருகே, வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, ஏழை பெண்களை வெளி மாநிலங்களுக்கு கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரியை சேர்ந்தவரின் மனைவி, வீட்டு வேலைக்காக தமிழகத்துக்கு சென்ற பின், எந்த தகவலும் கிடைக்கவில்லை என, கடந்த மாதம் 28ம் தேதி வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் பென்னி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. அதில், புகார்தாரரின் மனைவி சேலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், வீட்டு வேலைக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருவதாக கூறி, ஜூலை 7ம் தேதி பாலக்காட்டை சேர்ந்த பல்கீஸ், 49, மணி, 60, முகமதுகுட்டி, 64, கோபாலன், 47, ஆகியோர், சேலத்தில் உள்ள ஒருவருக்கு, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து, பணம் பெற்றுள்ளனர். மேலும், வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது தெரியவந்தது.
இந்த கும்பல், இதேபோன்று பல பெண்களை ஏமாற்றி, வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது, அந்த கும்பலை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை செய்கிறனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement