Jailer: “ஜெயிலர் செட்ல ரஜினி சாரை நல்லா கலாய்ச்சேன்!" – `ரித்து ராக்ஸ்' ரித்விக் ஷேரிங்ஸ்

ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. யூட்யூப் காணொளிகள் மூலம் பிரபலமடைந்து ‘O2’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நயன்தாராவுடன் அறிமுகமானாவர் ரித்விக்.

அதனை தொடர்ந்து ‘சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்திருந்தார். இப்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியனுக்குப் பேரனாக நடித்திருக்கிறார். கோவையில் வசிக்கும் ரித்விக்கை சந்தித்துப் பேசினோம்.

மழலைத் தன்மையில் பேசிய ரித்விக்,” தியேட்டர்ல எல்லாரோட சேர்ந்து பார்க்கிறப்போ ரொம்பவே சூப்பரா இருந்துச்சு. ஆடியன்ஸ் கூட சேர்ந்து பார்க்கும் போது எனக்கு ஜாலியா இருந்துச்சு .தியேட்டர்ல நிறைய பேர் என் கூட போட்டோ எடுத்துக்கிட்டாங்க. நான் நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க. சென்னைல இருக்கும் போது படத்தோட கோ-டைரக்டர் கூப்பிட்டாங்க. அப்போ டைரக்டர் என்கிட்ட ஒரு டையலாக் கொடுத்து பேச சொன்னாரு. நானும் பேசுனேன். அப்புறம் என்னை ஓகே பண்ணிட்டாங்க. ரஜினி சார்கூட நடிக்கப்போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. நான் முதன் முதல்ல பார்த்த ரஜினி சார் படம் ‘ 2.0’தான். எனக்கு ரஜினி சார் படத்திலேயே பிடிச்ச படம் ‘எந்திரன்’தான்.

யூட்யூப் சேனலோட ரீச் தான் இந்த வாய்ப்புக்கெல்லாம் காரணம். ‘ஜெயிலர்’ படத்தோட முதல் நாள் ஷூட்டிங் போனவுடனே ரஜினி சார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். அதுக்கு பிறகு நெல்சன் சார் என்னை ரஜினி சார்கிட்ட இன்ட்ரோ பண்ணார். ரஜினி சார் என்னோட யூட்யூப் வீடியோஸ்லாம் பார்த்து ‘நல்லா நடிக்கிறீங்க, நிறைய கெட்டப் மாத்துறீங்க அது நல்லா இருக்கு’ன்னு பாராட்டினார். ரஜினி சார் என்கிட்ட ,’ உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் ?, உன்னோட இலக்கு என்னன்னுலாம் கேட்பாரு. நெல்சன் சார் எப்பவும் ஜாலியா பேசிட்டே இருப்பார். டைரக்‌ஷன் டீம்கூட காமெடியா பேசிகிட்டே இருப்பாரு. ரம்யா கிருஷ்ணன் மேடமும் நல்லா பேசுவாங்க. ரஜினி சார்கூட ஒரு சீன்ல பெரிய டைலாக் இருந்துச்சு.அதை ரெண்டு டேக்லயே முடிச்சிட்டேன். அதுனால ரஜினி சார் நெல்சன் சார்கிட்ட சிக்னல் கொடுத்தாரு. ‘O2’ படத்துல எனக்கு டைலாக்ஸ் அதிகமா இருக்காது. ஆனால், எமோஷனல் சீன்ஸ் அதிகமா இருக்கும். அது எனக்கு புதுமையான அனுபவமா இருந்துச்சு.

‘சர்தார்’ படத்துல நான் ஜாலியா இருப்பேன். செட்ல எப்பவும் நான் கார்த்தி சாரை கலாய்ச்சுட்டே இருப்பேன். எமோஷனல் கதாபாத்திரம் பண்ணீட்டு ‘சர்தார்’ படத்துக்கு வரும் போது நல்லா வித்தியாசம் தெரிஞ்சது. ‘ஜெயிலர்’ செட்ல ரஜினி சாரை நல்லா கலாய்ச்சேன்.” எனச் சிரித்தவர்,” விளம்பரப் படத்துல மஞ்சு வாரியர் மேம்கூட நடிச்சிருந்தேன். எப்பவும் அவங்க சிரிச்சுட்டே இருப்பாங்க. ரஜினி சாரை நேர்ல பார்ததுதான் மறக்கமுடியாத ஒரு மொமன்ட். செட்ல நெல்சன் சார் ஒரு சீனை நடிச்சு காட்டுவார். அது ஈஸியா இருக்கும். ரெண்டு டேக்ல்யே சீனை முடிச்சிடலாம். எனக்கு விநாயகன் சார்கூட ஒரு சீன் இருந்துச்சு. அவர்கூட படத்துல நடிக்கும் போது அவர்தான் மெயின் வில்லன்னு தெரியாது. ஸ்டன்ட்ல சின்னதா வருவார்ன்னு நினைச்சேன். படம் முழுக்கவே ரொம்ப டெரர்ரா நடிச்சிருந்தாரு. ஜெயிலர் படத்துல கத்தி வச்சு என்ன வெட்ட வர்ற சீன் இருக்கும். அதுதான் நான் பண்ன முதல் ஸ்டன்ட் சீன். நான் சரியான முறைல அந்த சீன் பண்ணிட்டேன். அதை பார்த்து ரஜினி சார் ‘சூப்பர்’ன்னு சொன்னார்.

குழந்தை ரித்து (ரித்விக்)

ஸ்கூல் ஃப்ரண்ட்ஸுக்கு நான் ஜெயிலர்ல நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் ‘ரஜினி சாரை கேட்டேன்’னு சொல்லுன்னு என்கிட்ட சொன்னாங்க. எனக்கு கமல் சார், விஜய் சார், அஜித் சார்கூட நடிக்கனும்னு ஆசையிருக்கு. நான் இப்போ ஸ்கூலுக்கு தொடர்ந்து போறதுனால யூட்யூப்ல வீடியோஸ் பண்ண முடியல. நிச்சயம் இனிமேல் வீடியோஸ் தொடர்ந்து பண்ணுவேன்.” என உற்சாகமாகப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.