உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள Advanced Weapons and Equipments India limited (AWEIL) என்ற நிறுவனம், நீண்ட தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் இந்தியாவின் முதல் ரிவால்வரான `பிரபால்’ (Prabal) என்ற ரிவால்வரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்ற ரிவால்வர்களுக்கு சவால் விடும் வகையில், இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/dd036126_a1f9_465f_88ed_15c4137e6128.jpg)
இந்த இலகுரக ரிவால்வர் அதன் 32 துளைகள் மூலம் வேறுபடுகிறது. மேலும் இந்த `பிரபால்’ ரிவால்வர் 50 மீட்டர் வரை கணிசமாக அதன் இலக்கை அடையும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவிலுள்ள மற்ற ரிவால்வர்களை விட இரண்டு மடங்கு தனித் தன்மையைக் கொண்டிருக்கிறது.
இதன் அம்சங்களைப் பற்றி AWEIL நிறுவனத்தின் இயக்குநர், ஏ.கே.மௌரியா விளக்குகிறார். அதில், “பிரபால் ரிவால்வர் எடை குறைவானது மற்றும் அதன் பக்கவாட்டில் ஸ்விங் சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் ரிவால்வர்தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரிவால்வர் ஆகும். முன்பு இருந்த ரிவால்வர்களில் தோட்டாக்களைச் சொருகுவதற்கு துப்பாக்கியை மடக்க வேண்டியிருக்கும். தற்போதுள்ள ரிவால்வர் 20 மீட்டர் வரை மட்டுமே குறி பார்த்து சுடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
ஆனால், பிரபால் ரிவால்வர் வெறும் 700 கிராம் எடையுடன் (தோட்டாக்கள் தவிர்த்து) 50 மீட்டர் வரை குறி பார்த்து சுடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த நீளம் 177.6 மி. மீ ஆகும். இது எடை குறைவாக இருப்பதால் பெண்கள் கூட தங்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்த `பிரபால்’ தேர்வாகியிருக்கிறது. மேலும், பெண்கள் தங்களுடைய கைப்பையில் எடுத்துச் செல்லும் கையில் எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 18-ல் தான் தொடங்கும். இதற்கான உரிமம் பெற்றவர்கள் மட்டும் வாங்கலாம்” என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைகள், வெளிநாட்டு ராணுவங்கள் மற்றும் உள்நாட்டு மக்களின் சிறிய பயன்பாட்டிற்காக சிறிய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைத் தயாரித்து வருகிறது. இது முந்தைய ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் (OFB ) எட்டு தொழிற்சாலைகளை உள்ளடக்கியிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/WhatsApp_Image_2023_08_16_at_12_53_46_PM.jpeg)
இந்த ஆண்டு ரூ.6,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு பொருள்கள் செய்வதற்கான ஆர்டரைப் பெற்றிருக்கிறது. இதில் இந்திய ராணுவத்திடமிருந்து 300 `சாரங்’ பீரங்கிகளுக்கான ஆர்டரும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து 450 கோடி மதிப்பிலான ஆர்டர்களையும் பெற்றிருக்கிறது. இந்த `பிரபால்’ ரிவால்வர் துப்பாக்கி சாம்ராஜ்யத்துக்கு ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. கையாளுவதற்கு எளிமையாக இருப்பினும், மக்கள் அதை நல்ல வழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs