சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதித் திட்டத்தை எஸ்.பி.ஐ வங்கியானது டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து சீனியர் சிட்டிசன்கள் 7.60% வட்டி வருமானம் பெறலாம்.
சீனியர் சிட்டிசன்கள் உள்பட ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பெரும்பாலும் வைப்பு நிதித் திட்டங்களிலேயே முதலீடு செய்து வருகின்றனர். இவர்களுக்காகவே எஸ்.பி.ஐ வங்கி அம்ரித் கலாஷ் (SBI Amrit Kalash) என்ற சிறப்பு வைப்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அம்ரித் கலாஷ் திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், 2023 டிசம்பர் 31-ம் தேதி வரை அம்ரித் கலாஷ் திட்டத்தை நீட்டிப்பு செய்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. இது சீனியர் சிட்டிசன்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளிவந்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/p27d.jpg)
எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 400 நாள்கள் ஆகும். உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், என்.ஆர்.ஐ முதலீட்டாளர்களும் அம்ரித் கலாஷ் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தற்போது அம்ரித் கலாஷ் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60% வட்டி வழங்கப்படுகிறது. இது போக, எஸ்.பி.ஐ ஊழியர்கள், ஓய்வுபெற்ற எஸ்.பி.ஐ ஊழியர்களுக்கும் கூடுதல் வட்டி வழங்கப்படும்.
வரி எவ்வளவு?
சிறப்பு டெபாசிட்டுகளுக்கு மெச்சூரிட்டியின்போது டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்யப்பட்டபின் வட்டித் தொகை செலுத்தப்படும்.
கூடுதல் வசதிகள் என்னென்ன?
டெபாசிட்டர்கள் தங்களது வைப்புத் தொகையை வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/146271_thumb.jpg)
எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது?
-
நேரடியாக எஸ்.பி.ஐ வங்கி கிளைகளுக்குச் சென்று முதலீடு செய்யலாம்.
-
எஸ்.பி.ஐ இணையதளம் (https://www.onlinesbi.sbi/) வாயிலாகவும் முதலீடு செய்யலாம்.
-
மொபைலில் எஸ்.பி.ஐ யோனோ (SBI YONO) செயலி வாயிலாக முதலீடு செய்யலாம்.
அதிக வட்டி வருமானம் பெற நினைக்கும் சீனியர் சிட்டிஸன்கள் இந்தத் திட்டத்தை இனியாவது பரிசீலிக்கலாமே!