திருப்பதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி மலைப்பாதையில் நடந்துசென்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 2வதாக மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரி பல லட்சம் பேர் வரும் நிலையில், பல ஆயிரம்பேர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கோரி கீழ் திருப்பதியில் இருந்து நடந்தே மேல்திருப்பதி வரை சென்று […]