தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் கோட்டங்களில் ஒன்று மதுரை. 1956ல் இருந்து திறம்பட செயல்பட்டு பல்வேறு ரயில்களை இயக்குவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. 1,356 கிலோமீட்டர் நீள ரயில் தடங்களுடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே கோட்டம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. புதிய ரயில்கள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப மதுரை கோட்டத்தில் உள்ள வழித்தடங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
திருமங்கலம் டூ திருநெல்வேலி வழித்தடம்அந்த வகையில் கடந்த சில மாதங்களில் செய்யப்பட்ட அப்டேட்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் திருமங்கலம் – வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி இடையிலான வழித்தடத்தில் ரயிலின் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 110 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி டூ தென்காசி வழித்தடம்இதையடுத்து திருநெல்வேலி – தென்காசி இடையிலான 70.2 கிலோமீட்டர் தூரப் பாதையில் ரயிலின் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டரில் இருந்து 110 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டது. அதுவே ஜூன் மாதம் மதுரை – ஆண்டிப்பட்டி – தேனி இடையிலான 74.78 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் ரயிலின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விரைவான பயணம்மதுரை – திருமங்கலம் இடையிலான 17.32 கிலோமீட்டர் தூரப் பாதையில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் விரைவான பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பி.ஆனந்த் உறுதி செய்துள்ளார். இதில் லேட்டஸ்ட் என்னவென்றால் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் தான்.
மின்மயமாக்கும் பணிகள்டீசல் எஞ்சினில் ஓடிக் கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் மின்சார ரயில்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக ரயில் பாதையின் மேல் பகுதியில் மின்சார இணைப்பு வசதிகளை கட்டமைத்து வருகின்றன. மதுரை ரயில்வே கோட்டத்தில் முதன்மையான ரயில்கள் இயக்கப்படும் பகுதிகள் அனைத்தும் மின்மயமாக்கம் செய்யப்பட்டு விட்டன. தற்போது நிலவரப்படி, அதாவது ஆகஸ்ட் 2023ன் படி 88 சதவீதம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டனர்.டிசம்பர் 2023ல் முடிந்துவிடும்இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் 442 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பகவதிபுரம் – எடமோன் வரையிலான 33 கிலோமீட்டர் தூரம், மதுரை – போடிநாயக்கனூர் இடையிலான 90 கிலோமீட்டர் தூரம் ஆகியவற்றில் மின்மயமாக்கும் பணிகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்திலும் மதுரை கோட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது.
வருவாய் அதிகரிப்புகடந்த நிதியாண்டை காட்டிலும் 9 சதவீத அளவிற்கு சரக்கு ரயில் சேவையை அதிகம் வழங்கியிருக்கிறது. ஏப்ரல் – ஜூலை 2023 காலகட்டத்தில் 418.45 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை ரயில்வே கோட்டம் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 94.31 கோடி ரூபாய் அளவு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இதே காலகட்டத்தில் பயணிகள் வருகை 11.94 சதவீதமும், சரக்கு ரயில் வருவாயில் 85.46 சதவீதமும் அதிகரித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.