கடந்த காலங்களில் காலநிலை மாற்றம், தென்மேற்கு பருவக்காற்று இல்லாததால் மற்றும் வழமைக்கு மாற்றமாக பருவகாலம் காரணமாக வேகமாக அதிகரித்த மீன்களின் விலை தற்போது பாரியளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. பி. உபுல் நேற்று (16) மீன்பிடித் துறை அமைச்சில் வைத்து அமைச்சருக்கு அறிக்கை வழங்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தலைவர், தற்போது லின்னா பாரை மீன் 400 தொடக்கம் 500 ரூபாவும், சூரை மீன் 1100 ரூபாவும், கணவாய் 700ரூபாவும், பலயா 700ரூபா வரையும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சூரை மீன் 2200 ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்பட்டதுடன் ஏனைய மீன் வகைகள் 1000ரூபாவை விடவும் அதிகமாகக் காணப்பட்டது.
இதனால் நுகர்வோர் நிவாரணமின்றி சிரமப்பட்டதுடன் தற்போது தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் முடிந்து வருவதுடன் மீன்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதனால் நுகர்வோருக்கு நியாயமான நிவாரணம் கிடைக்கும் என்று தலைவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.