2050ல் காத்திருக்கும் பெரிய ஆபத்து… இந்த 25 நாடுகளில் குடிநீருக்கு திண்டாட்டம்… என்ன காரணம் தெரியுமா?

தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் நடந்தாலும் ஆச்சரியமில்லை என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்து வருகின்றன. குடிநீர் மிகப்பெரிய வர்த்தகமாக உலகம் முழுவதும் காணப்படுகிறது. தண்ணீரின்றி எந்த ஒரு உயிரும் வாழ முடியாது என்ற நிலை உள்ளது. தண்ணீரை அனைவருக்கும் பகிர வேண்டியது மனிதர்களின் கடமையாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சினை

ஆனால் போதிய நீர் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறதா? என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அதிக அளவில் தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தெற்காசியா. அதில் இந்தியாவும் இருப்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

நாகையில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

ஆய்வறிக்கை விவரம்

வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை கடும் நெருக்கடியை உண்டாக்கும் என்று சர்வதேச அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. அந்த வகையில் Aqueduct Water Risk Atlas என்ற பெயரில் உலக வள நிறுவனம் (World Resources Institute) செய்துள்ள ஆய்வின் முடிவுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் தேவை அதிகரிப்பு

இதில், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்கான போராட்டம் என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய சூழலில் ஆண்டிற்கு ஒருமாதம் பாதி மக்கள்தொகை தண்ணீர் பிரச்சினையை சந்திக்கிறது. இந்த அளவு என்பது 2050ஆம் ஆண்டு 60 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்போது தண்ணீரின் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்கின்றனர்.

அரபு நாடுகளில் புதிதாக திறக்கப்படும் இந்தியப் பள்ளிகள்.. மத்திய அரசு சூப்பர் முடிவு!

எந்தெந்த நாடுகளில்

குறிப்பாக 25 நாடுகளில் தண்ணீருக்காக அவசரநிலை உண்டாகலாம் எனவும், தற்போதே கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த நாடுகள் என்று பார்த்தால்,

பஹ்ரைன்சைப்ரஸ்குவைத்லெபனான்ஓமன்கத்தார்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சவுதி அரேபியாஇஸ்ரேல்எகிப்துலிபியாஏமன்போட்ஸ்வானாஈரான்ஜோர்டான்சிலிசான் மரினோபெல்ஜியம்கிரீஸ்துனிசியாநமிபியாதென் ஆப்பிரிக்காஈராக்இந்தியாசிரியா

5 நாடுகளில் அதிக பாதிப்பு

ஆகிய நாடுகள் என்பது கவனிக்கத்தக்கது. இதில் அதிக பாதிப்பிற்கு ஆளாகப் போவது பஹ்ரைன், சைப்ரஸ், குவைத், லெபனான், ஓமன் ஆகிய ஐந்து நாடுகள் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்தால் பல்வேறு விஷயங்கள் முன்வந்து நிற்கின்றன.

இரவோடு இரவாக தீக்கிரையான நகரம்.. ஹவாய் தீவில் பரவும் காட்டுத் தீ.. 106 பேர் பலி.. 1000 பேர் மிஸ்ஸிங்!
என்ன காரணம்?

விஞ்ஞானிகளின் பார்வையில், மக்கள்தொகை அதிகரிப்பு, நகரமயமாதல், தொழில்மயமாதல், பருவநிலை மாறுபாடு, முறையற்ற தண்ணீர் மேலாண்மை ஆகியவை தான் தண்ணீர் பிரச்சினைக்கு இட்டு செல்வதாக தெரிகிறது. தண்ணீர் விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கே அச்சுறுத்தலாக விளங்கக் கூடியது.

உணவு உற்பத்தியில் பாதிப்பு

விவசாயத்தில் தண்ணீரின்றி எதுவும் செய்ய முடியாது. உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசி, கோதுமை, மைதா உள்ளிட்டவற்றின் உற்பத்தி தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு நாடும் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.