Director Shankar: ஒரு கோபத்தில் தான் அந்த கதையை உருவாக்கினேன்..மனம்திறந்து பேசிய ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று.அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஒருபக்கம் ராம் சரணின் game changer படத்தை இயக்கி வரும் ஷங்கர் மறுபக்கம் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகின்றார். இவ்வாறு ஒரே சமயத்தில் இரு மிகப்பெரிய பட்ஜெட் படங்களை ஷங்கர் இயக்கி வருகின்றார். இடைவெளி இல்லாமல் உழைத்து வரும் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை game changer செட்டில் கொண்டாடி வருகின்றார்

இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பற்றி பல தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு தகவலை பற்றி தான் நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம். அதாவது ஷங்கர் என்றாலே நம் மனதிற்கு வருவது பிரம்மாண்டம் தான். கனவில் நாம் நினைப்பதை திரையில் கொண்டு வருபவர் தான் ஷங்கர்.

ஷங்கரின் பிறந்தநாள்

ஒரு பாடலாக இருந்தாலும், காட்சியாக இருந்தாலும் எதிலும் பிரம்மாண்டம் காட்ட ஷங்கர் தவறுவதில்லை. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர் கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்ட வித்யாசமான படங்களை இயங்குவதே அவரது ஆசையாக இருந்ததாம். எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷங்கர் அழகிய குயிலே என ஒரு வித்யாசமான கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்ட ஒரு கதையை உருவாக்கி இருந்தார்.

Rajinikanth: ஜெயிலர் எதிரொலி..ரஜினிக்கு கிடைத்த அட்வைஸ்..உஷாரான தலைவர்..!

இக்கதையை படமாக எடுக்கவேண்டும் என கடுமையாக முயற்சித்துள்ளார் ஷங்கர். பல தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடம் இந்த கதையை கூறியுள்ளார். ஆனால் கதையை கேட்ட அனைவரும் கதை நன்றாக இருப்பதாகவும், ஆனால் கமர்ஷியல் விஷயங்கள் இப்படத்தில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

ஒரு சிலர் கமர்ஷியல் அம்சங்களை இக்கதையில் இணைக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எந்த கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல் தான் நினைத்தபடி அழகிய குயிலே கதையை படமாக எடுக்க முயற்சித்தார் ஷங்கர். ஆனால் யாரும் தயாரிக்க முன்வரவில்லை. எனவே கோபத்தில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் இருக்கும் ஒரு கதையை ஷங்கர் உருவாக்கினார்.

குவியும் வாழ்த்துக்கள்

அந்த கதை தான் ஜென்டில் மென். காமெடி, காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக ஜென்டில் மென் படத்தை உருவாக்கினார் ஷங்கர். மிகப்பிரம்மாண்டமாக தயாரான ஜென்டில் மென் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து ஷங்கருக்கு தொடர்ந்து பிரமாண்டமான படங்களை இயக்கவே வாய்ப்பு வந்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இன்று வரை அவரின் கனவு படமான அழகிய குயிலே கதையை படமாக ஷங்கரால் எடுக்கமுடியவில்லை. எதிர்காலத்தில் அழகிய குயிலே கதையை ஷங்கர் படமாக எடுப்பாரா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.