Jailer: தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் முதல் முறையாக…: ஜெயிலர் செய்த மாபெரும் சாதனை

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியனாக வந்து சம்பவம் செய்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

ரஜினி தமிழ் மக்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறார் தெரியுமா? ரஜினி ஃபேன்ஸ்
படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 72 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் வெளியான 7 நாட்களில் தமிழகத்தில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளது ஜெயிலர். தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸான ஒரே வாரத்தில் ரூ. 150 கோடி வசூலித்திருக்கிறது என்றால் அது ஜெயிலர் மட்டும் தான்.

தமிழகத்தில் ஜெயிலர் செய்திருக்கும் சாதனையை பார்த்த சினிமா ரசிகர்களோ, ரஜினி தான் என்றுமே பாக்ஸ் ஆபீஸ் கிங், சூப்பர் ஸ்டார் என நிரூபித்துவிட்டார் என தெரிவித்து வருகிறார்கள்.

Jailer Collection: ஒரே வாரத்தில் ரூ. 450 கோடி வசூலித்த ஜெயிலர்: தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 150 கோடி

ஜெயிலருக்கு உலக அளவில் ரூ. 450 கோடி கிடைத்திருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை தான் ஜெயிலரால் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 15ம் தேதி முடிந்தும் பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலரை யாராலும் அசைக்கக் கூட முடியவில்லை.

தமிழகம் தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஜெயிலர் அதிக அளவில் வசூல் செய்திருக்கிறது, மேலும் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஜெயிலர் அசால்டாக ரூ. 500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பட வேலை முடிந்ததும் இமயமலைக்கு கிளம்பிவிடுவார் ரஜினி.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தான் ஜெயிலர் பட வேலை முடிந்ததும் கிளம்பிவிட்டார். ஜெயிலர் ரிலீஸ் நாளில் ரஜினி இமயமலையில் இருந்தார். இன்று அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் இமயமலைக்கு சென்றதும் ஜெயிலர் படம் வெற்றி பெற்றதற்கு காரணம் என பேசப்படுகிறது. மேலும் இமய மலைக்கு பயணம் செய்யும்போது எல்லாம் தனக்கு புது சக்தி கிடைப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

மகா அவதாரமான பாபாஜியின் கருணையால் தான் ஜெயிலர் படம் இந்த அளவுக்கு பெற்றி பெற்றிருப்பதாக ரஜினி ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இமயமலைக்கு சென்றிருக்கும் ரஜினியின் முகத்தில் புது தெளிவும், பொலிவும் தெரிகிறது. அதை பார்த்தும் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஜெயிலரை அடுத்து ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் இஸ்லாமியராக வருகிறாராம்.

போலி என்கவுன்ட்டர்களை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் பெரிய அளவில் ரீச்சாகும் என நம்பப்படுகிறது.

ஞானவேலின் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.

Jailer:அதிமுக மாநாட்டுக்கு வந்துடணும்: ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக ஜெயிலர் டிக்கெட் கொடுத்த கடம்பூர் ராஜு

அந்த படத்தில் கமல் கவுரவத் தோற்றத்திலாவது வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இதற்கிடையே முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு ஜெயிலர் படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கி அதை ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக கொடுத்து அதிமுக மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.