jailer collection: கடந்த பதினைந்து ஆண்டுகளில் இதுவே முதல் முறை..ஜெயிலர் சாதனையால் கொள்கையை மாற்றிய சன் பிக்சர்ஸ்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எந்திரன் படத்திற்கு பிறகு சரியான வெற்றி அமையவில்லை என ஏங்கிக்கொண்டிருந்த தலைவரின் ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது. நெல்சனின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஜெயிலர் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் சேர்ந்து ஒரு கலையாக நெல்சன் இப்படத்தை உருவாக்கியிருந்தார். அதிலும் குறிப்பாக ஷிவ்ராஜ்குமார் மற்றும் மோகன்லாலின் சிறப்பு தோற்றம் செம மாஸாக இருந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது 375 கோடி வரை வசூலித்துள்ளது. படம் வெளியான முதல்வாரத்தில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது.

ஜெயிலர் சக்ஸஸ் மீட்

மேலும் இனி வரும் நாட்களில் ஜெயிலர் திரைப்படம் பல வசூல் சாதனைகளை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒருபக்கம் இருக்க தற்போது ஜெயிலர் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்சன் உட்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய அனைவர்க்கும் தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Director Shankar: ஒரு கோபத்தில் தான் அந்த கதையை உருவாக்கினேன்..மனம்திறந்து பேசிய ஷங்கர்..!

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நடத்தும் முதல் சக்ஸஸ் மீட் இதுதானாம். 2008 ஆம் ஆண்டு துவங்கி இதுவரை பல படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த சன் பிக்சர்ஸ் நடத்தும் முதல் சக்ஸஸ் மீட் இதுதான் என தெரியவந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது.

இதுவே முதல் முறை

எந்திரன் உட்பட வசூலில் சாதனை படைத்த பல படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் இதுவரை சக்ஸஸ் மீட் நடத்தாதது தான் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது. இருந்தாலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றாற்போல சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மாறியுள்ளதாக பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நெல்சன், ரஜினி ஜெயிலர் படத்தை ரிலீசுக்கு முன்பு பார்த்துவிட்டு பாராட்டியதாகவும், அது தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.