RE Himalayan 450 – ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அறிமுக தேதி உறுதியானது

நவம்பர் 1 ஆம் தேதி அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 450 பைக்கினை விற்பனைக்கு வெளியிடுவதற்கான முதல் டீசரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வெளியிட்டடுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சோதனை ஓட்டத்தில் உள்ள 450சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பெற உள்ள முதல் மாடலாகும்.

பல்வேறு புகைப்படங்கள் முக்கிய விபரங்கள், டிசைன் வடிவமைப்பு என பலவற்றை சோதனை ஓட்ட படங்களில் வெளியாகியிருந்த நிலையில், இறுதியாக விற்பனைக்கு தயாராகியுள்ளது.

RE Himalayan 450

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதனை தொடர்ந்து அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹிமாலயன் 450 வெளியிடப்பட உள்ளது.

ஹிமாலயன் 450 பைக்கில் இடம்பெற உள்ள என்ஜின் 35 hp க்கு கூடுதலான பவர் மற்றும் சிறப்பான டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க், எல்இடி விளக்குகள் மற்றும் புத்தம் புதிய ஒற்றை வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் மீண்டும் எக்ஸ்ஹாஸ்ட் நோட் ஆனது வெளியாகியுள்ளது. விற்பனைக்கு வரும் பொழுது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மாடல் ரூ.2.60 லட்சத்துக்குள் வெளியாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.