‘தி தாஷ்கன்ட் ஃபைல்ஸ்’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்களை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. அவரது இயக்கத்தில் வரும் செப்டாம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் வேக்ஸின் வார். இதனையடுத்து ‘டெல்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், பேசுவதும் வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கரண்ஜோஹர், மற்றும் ஷாருக்கானின் திரைப்படங்கள் இந்திய கலாச்சாரத்தை சேதப்படுத்தியுள்ளன என்று விமர்சித்திருக்கிறார். “நான் இந்தியா முழுக்க பயணம் செய்தபோது உண்மையான இந்தியாவை பார்த்தேன். யாரும் சொல்லாத ஏராளமானக் கதைகளை நான் கேட்டேன்.
அவை என்னுடைய சித்தாந்தங்களையும் சினிமாக்கான அணுகுமுறையும் மாற்றிவிட்டது. சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு பிறகு சினிமாவில் உண்மையான கதைகள் சொல்லப்பவில்லை. குறிப்பாக கரண் ஜோஹர் மற்றும் ஷாருக்கான் போன்றவர்களின் திரைப்படங்கள் இந்திய கலாசாரத்தை சேதப்படுத்தியுள்ளன. அதனால்தான் நான் உண்மைக் கதைகளை சொல்வது மிக முக்கியம் என்பதை உணர்ந்தேன்”என்று பேசியிருக்கிறார். அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.