வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: ம.பி., மாநிலத்தில் நாய்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து உரிமையாளர்களும் மோதிக் கொண்டனர். அதில், உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ம.பி., மாநிலம் இந்தூரில் கஜ்ரானா போலீஸ் ஸ்டேசன் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்பால் ராஜாவத். இவர் பரோடா வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்துள்ளார். நேற்று( ஆக.,17) இவர் தனது நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, பக்கத்து வீட்டுக்காரரும், அவரது நாயுடன் நடைபயிற்சிக்கு வந்தார். அப்போது, இரண்டு நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த இரு உரிமையாளர்களும் மோதிக் கொண்டனர்.
இதன் பிறகு கோபத்துடன் வீட்டிற்கு வந்த ராஜ்பால் ராஜாவத், தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதுடன், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் சுட்டார். அதில், ராகுல் வர்மா மற்றும் விமல் ஆகியோர் உயிரிழக்க, 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த போலீசார் ராஜ்பால் ராஜவத்தை கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement