புனே செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| Bomb threat call received at call center for a Delhi-Pune flight; nothing suspicious found

புதுடில்லி: டில்லியில் இருந்து புனே செல்ல இருந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த 100 பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். உடைமைகள் கீழே கொண்டு வரப்பட்டன. பிறகு அந்த விமானம் தனியாக கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில், சந்தேகப்படும்படி எந்த பொருளும் சிக்கவில்லை. காலை 8:30 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம், மிரட்டல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளானார்கள். வழக்கமான நடைமுறைகளின்படி, பாதுகாப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளித்த பின்னரே, விமானம் கிளம்பி செல்லும் என விமான நிறுவனம் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.