இராமநாதபுரம் மண்டபம் பகுதியில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர்
கலந்து கொண்டு உரையாற்றினார்.
மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில வாரங்களுக்கு முன்னரே அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வரும் மாநாட்டுக்கு வருவதாக ஒப்புதல் அளித்த நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் குடும்பத்தினரோடு மாநாட்டில் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசும் போது, தமிழக அரசு மீனவர்கள் நலன் காக்கும் பொருட்டு முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!
நல்ல சாப்பாட்டை தவற விட்டுட்டீங்க – தமிழிசை ஜாலியாக பேட்டி
14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் இந்த நிகழ்ச்சி மூலமாக வழங்கப்பட உள்ளது.மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்.45 ஆயிரம் பேருக்கு மீன்பிடித் தொழிலுக்கான கூட்டுறவுக் கடன்கள் வழங்கப்படும்.மீன்பிடித் தடைகாலம் 5000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற உள்ளனர்.60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன் பிடிதடைகாலத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
1000 நாட்டு படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணென்னெய் 3400 லிட்டர் 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டலிரிலிருந்து 19 ஆயிரம் லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்படும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4,400 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்படும்.தங்கச்சி மடம் மீன்பிடிதுறைமுகம் அமைக்க ஆய்வுகள் தொடங்கியுள்ளனகுந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வலை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தில் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.