வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி என்பவர், விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யு.ஏ.இ) சேர்ந்தவர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி, பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அப்போது தந்தையிடம் பூமியில் உங்களுக்கு பிடித்த விஷயம் என மகன் கேட்கிறார். அதற்கு ‘நீ தான்’ என நெயாடி பதில் அளிக்கிறார். மேலும் ‘பூமியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதே போல் தான் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடன் இருக்கிறோம்’ என்றும் கூறினார். ஆகஸ்ட் 10ம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement