சென்னை: நடிகர் தனுஷின் வாத்தி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வருகிறது டி50 படம். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.