Hyundai Venue – ஹூண்டாய் வென்யூ நைட் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் வென்யூ காரில் கூடுதலாக நைட் எடிசன் விற்பனைக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அல்கசார், கிரெட்டா அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு வெளியானது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ள நைட் எடிசன் S, SX, மற்றும் SX(O) வேரியண்டுகளில் மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.

Hyundai Venue Knight Edition

சாதாரன வென்யூ மாடலை விட 23க்கு மேற்பட்ட மாற்றங்களை பெற்றதாக வந்துள்ள வென்யூ நைட் எடிசன் கருப்பு நிறம் மற்றும் பித்தளை நிறத்திலான பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது.  கருமை நிறத்திலான லோகோ, கிரில், பம்பர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

முன்பக்கத்தில் சிவப்பு நிற காலிப்பர் கொண்ட டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன் கருப்பு வண்ணம் பூசப்பட்ட ரூஃப் ரெயில், சுறா துடுப்பு போன்ற ஆண்டெனா மற்றும் வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள் பெற்றுள்ளது.  பித்தளை வண்ண இன்ஷெர்ட் கொண்டு முழுக்க கருப்பு நிற டேஷ்போர்டு, கருப்பு இருக்கை அப்ஹோல்ஸ்டரி, இரட்டை கேமரா அமைப்புடன் கூடிய டாஷ்கேம் பெற்றுள்ளது.

hyundai venue knight edition

120 HP பவரை வழங்கும் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்).

2023 Hyundai Venue Knight Edition price

1.2L S(O) Knight MT at ₹. 9,99,990

1.2L SX Knight MT at Rs. 11,25,700

1.2L SX Knight MT Dual Tone at Rs. 11,40,700

1.0L SX(O) Knight MT at Rs. 12,65,100

1.0L SX(O) Knight MT Dual Tone Rs. 12,80,100

1.0L SX(O) Knight DCT at Rs. 13,33,100

1.0L SX(O) Knight DCT Dual Tone at Rs. 13,48,100

ஹூண்டாய் வென்யூ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.