கடந்தாண்டு இதே நேரத்தில் இயக்குனர் நெல்சன் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார். ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அவரை விமர்சித்த அனைவரும் தற்போது நெல்சனை கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களால் பல ட்ரோல்களை சந்தித்தார் நெல்சன். அந்த சமயத்தில் நெல்சன் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து படம் பண்ணுவதை பற்றி பேசியதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.
தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான காம்பாக் கொடுத்துள்ளார் நெல்சன். எனவே சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் நெல்சனின் முகம் தான் தற்போது தெரிந்து வருகின்றது. அந்த அளவிற்கு பேட்டிகளாக கொடுத்து வருகின்றார் நெல்சன். அப்பேட்டிகளில் நெல்சன் ஓபனாக பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
ஜெயிலர் சக்ஸஸ்
அந்த வகையில் பீஸ்ட் படத்தினால் தான் சந்தித்த விமர்சனங்களை பற்றியும், பீஸ்ட் படத்தில் என்ன தவறு நடந்தது என்பது பற்றியும் நெல்சன் பேசியுள்ளார். இவ்வாறு வெளிப்படையாக பேசிய நெல்சனை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நெல்சன் பீஸ்ட் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்ததாக கூறியுள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
latha rajinikanth: என் கணவரை ரொம்ப அழகா காட்டியிருக்கீங்க..நெகிழ்ந்து போய் படக்குழுவிற்கு பரிசு கொடுத்த லதா ரஜினிகாந்த்..!
அதாவது பீஸ்ட் படம் முடிந்த பிறகு கமலை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதை பற்றி பேசியதாகவும் கூறியுள்ளார் நெல்சன். மேலும் எதிர்காலத்தில் கமலுக்கான வித்யாசமான கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இணைவோம் என்பது போலவும் நெல்சன் பேசியுள்ளார்.
கமலை சந்தித்த நெல்சன்
ஆனால் இதைப்பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும் ரசிகர்கள் அனைவரும், ரஜினிக்கு பிறகு நெல்சன் கமலுடன் இணைந்தால் செமையாக இருக்கும் என கூறி வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க நெல்சன் அடுத்ததாக தனுஷை இயக்கப்போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் நெல்சனின் நண்பரும் நடிகருமான கிங்ஸ்லி அதை மறுத்துள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
நெல்சன் இன்னும் அடுத்த படத்தை பற்றி யோசிக்கவே இல்லை என கிங்ஸ்லி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக யாருடன் இணையப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.