மகளை சைக்கோ பாணியில் துன்புறுத்திய கணவன்.. ஒரே போடாக போட்ட தந்தை.. மாப்பிள்ளை காலி!

விருதுநகர்:
தன்னை பெரிய சைக்கோ என்று நினைத்துக் கொண்டு கட்டிய மனைவியை சித்ரவதை செய்து வந்த இளைஞரை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் விருதுநகரையே வெலவெலக்க வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவரது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் மாசாணம் (28) என்ற ஏழைப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முடிந்து 6 வருடங்கள் ஆகிறது.

இதனிடையே, அண்மைக்காலமாக தனது மனைவி மாசாணம் மீது நாகராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிற ஆண்களுடன் செல்போனில் பேசி மாசாணம் பழகி வருவதாக சந்தேகப்பட்டு வந்திருக்கிறார் நாகராஜ். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, தான் சந்தேகப்படும் சமயங்களில் எல்லாம் வீட்டிற்கு வரும் நாகராஜ், ஒரு கறுப்புத் துணியை எடுத்து மனைவியின் முகத்தில் கட்டிவிட்டு சரமாரியாக பெல்ட்டால் அடிப்பாராம்.

அதாவது, எப்போது எங்கே அடி விழும் என எதிர்பார்க்காத நேரத்தில் அடிப்பதற்காக இந்த சைக்கோத்தனத்தை செய்து வந்திருக்கிறார் நாகராஜ். வீட்டின் ஏழ்மையால் இரண்டாம் தாரமாக சென்ற மாசாணமும் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில்தான், நேற்று தனது மகள் மாசாணத்தின் வீட்டிற்கு அவரது தந்தை முத்துக்குட்டி (65) வந்துள்ளார். அன்றைக்கும் இதே மாதிரி மாசாணத்தின் முகத்தில் துணியால் கட்டி அடித்து சித்ரவதை செய்திருக்கிறார் நாகராஜ்.

தனது மகள் தன் கண் முன்னே சித்ரவதை செய்யப்படுவதை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முத்துக்குட்டி, அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து மாப்பிள்ளை நாகராஜை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் முத்துக்குட்டியின் தலை பிளந்தது. தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், அங்கேயே சரிந்து உயிரிழந்தார் நாகராஜ். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து மாமனார் முத்துக்குட்டியை கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.